ஜோதிட தகவல்: மனித (மிருக) குணம்

Tuesday 30 September 2014
ஜோதிட தகவல்: மனிதனிடம் காணும் மிருக குணம்




வஞ்சனையாலும், சூதினாலும் சமயத்திற்கேற்ப பலவித கபடங்கள் செய்து ஜீவிப்பவன் - நரி.

ஊக்கமில்லாமல் ஏதேனும் ஒன்றை நினைத்துக்கொண்டு மனம் சோர்ந்து தலைகவிழ்ந்து உட்கார்ந்து இருப்பவன் - தேவாங்கு.

தர்மத்திலும் புகழிலும் விருப்பம் இல்லாமல் அற்ப சுகத்திழேயே மூழ்கிகிடப்பவன் - பன்றி.

சுதந்திரத்திலே இச்சை இல்லாமல் பிறருக்கு பிரியமாய் நடந்து கொண்டு வயிறு வளர்ப்பவன் - நாய்.

பொருளை அறியாமல் முன்னோரின் சாஸ்திரங்களைத் திரும்ப திரும்ப வாயினால் சொல்லிக்கொண்டிருப்பவன் - கிளிப்பிள்ளை.

பிறரது அக்கிரமத்தை நிறுத்த முயலாமல் தனது மந்த குணத்தால் பொறுத்துக்கொண்டிருப்பவன் - கழுதை.

தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்துண்பவன் - கழுகு.

                                                 
                                                    -மகாகவி பாரதி..

0 comments:

Post a Comment