விஷம் தீண்டி மரணம்

Saturday 13 December 2014
விஷம் தீண்டி மரணம்


பிறப்பும் இறப்பும் மானுட வாழ்வில் தவிர்க்கமுடியாதது. இதன் இடைப்பட்ட காலமே வாழ்க்கை. வாழ்க்கையின் அர்த்தம் புரியாமலேயே வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

உலகில் பிறக்கும் அனைத்து உயிரினங்களும் ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும். ஆசனங்கள் மற்றும் சில பயிற்ச்சிகள் மூலம் வாழ்நாளை நீட்டிக்கமுடியுமே தவிர இறப்பை தவிர்க்கமுடியாது.

மூப்பு எய்தி இறப்பவர்கள் பாதிபேர் எனில், தற்பொழுது துர்மரணம் எய்துவோர் எண்ணிக்கைதான் அதிகம். விஞ்ஞான வளர்ச்சி என்கிறபேரில் வாகனங்கள் எமனாக இருக்கிறகாலம் இது.

இதுபோலவே விஷஜந்துக்களால் உயிர் இழப்பவர்கள் சிலபேர். மொத்தத்தில் இறப்பு எப்படி நம்மை தீண்டும் என்று நமது ஜாதகம் மூலம் அறியலாம். ஒருவர் விஷஜந்துக்களால் கடிபட்டு உயிர் இழப்பாரா என்பதை ஜாதகம் மூலம் அறியலாம்.

அதாவது ஜனன ஜாதகத்தில் 8ம் இல்லத்தில் செவ்வாய் இருந்து ,சூரியனோடு பாம்பும் சேர்ந்து நின்றால் அச்சாதகன் விஷம் தீண்டி மரணம் எய்துவான். 

சத்திரம் கட்டி அனைவருக்கும் உணவளிப்பவன்

Thursday 11 December 2014
சத்திரம் கட்டி அனைவருக்கும் உணவளிப்பவன்


உணவு, இன்றியமையாதது. இது இல்லாமல் யாரும் இல்லை என்றே கூறலாம். பிறந்தது முதல் நாம் உடல் ஆரோக்கியமுடனும், உயிர் வாழ இன்றியமையாததும் உணவு.

சிலர் டயட் என்கிறபேரில் பெருத்த உடலை குறைக்க உணவை குறைத்தும் அல்லது உண்ணாமல் ஃபாஸ்டிங் என்றும் உலவிவர, நமது நாட்டிலேயே அன்றாட ஒரு வேலை உணவிற்க்கு வழியில்லாமல் பட்டினியால் வாடுவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இப்படி உணவுக்கு கஷ்டப்படுவோருக்கு யாராவது உணவு அளித்தால், இவர்களுக்கு அவர்கள் தெய்வமாக தெரிவார்கள். ஒருவருக்கு வயிறார உணவு அளிப்பது பெரிய விஷயம்,புன்னியமும் கூட.

ஒருவருக்கே இந்நிலை எனில் பல பேருக்கு உணவளிக்க வேண்டுமெனில் அதற்க்கு நல்ல மனமும், புண்ணியமும் அதற்கான போதிய போதிய வருமானமும், எல்லாவற்றிற்க்கும் மேலாக அதற்கான அமைப்பும் வேண்டும்.

அதாவது அவனது ஜாதகத்தில், 10ம் அதிபதி 4ம் வீட்டில் அமர்ந்து, லக்ன அதிபதி திரிகோணத்தில் நின்றால் அந்த ஜாதகன் இதுபோன்ற அனைவருக்கு உணவளிக்கும் வகையில்  சத்திரம் கட்டி மற்றவர்களின் பசியாற்றுவான். தெய்வத்தின் மறுவுருவாக மற்றவர்க்கு தெரிவான்.