நாழிகை vs நேரம் ..

Friday 30 May 2014
நாழிகை vs நேரம்:


60விநாடி என்பது 1 நாழிகை

60 நாழிகை என்பது 1 நாள்

2 1/2 நாழிகை என்பது 1 மணி

2 1/2 நாழிகை என்பது 1 ஓரை

3 1/2 நாழிகை என்பது 1முகூர்த்தம்

2 முகூர்த்தம் என்பது 1 சாமம்

4 சாமம் என்பது 1 பொழுது

2 பொழுது என்பது 1 நாள்

15 நாள் என்பது 1 பட்சம்

2 பட்சம் என்பது 1 மாதம்

6 மாதம் என்பது 1 அயனம்

2 அயனம் என்பது 1 வருடம்

60 வருடம் என்பது 1 வட்டம்

120 வருடம் என்பது 1 மனித ஆயுள் வட்டம்

குழந்தையின் ஜனன மாதம்

நீங்கள் பிறந்த மாதத்தை ஜாதகம் கொண்டு எப்படி அறிவது?.





ஒருவரின் ஜனன ஜாதகத்தை பார்த்ததும் அவர் பிறந்த வருடத்தை நாம் எளிதில் அறியலாம். அது எவ்வாறு எனில்,சூரியன் என்பவர் ஒரு மாதக்கோள்,அதாவது அவர் 1 ராசிக்கட்டத்தை கடக்க 1 மாதம் ஆகும். ஒருவர் பிறக்கும் போது சூரியன் எந்த ராசியில் உள்ளாரே அதுவே அவர் பிறந்த மாதம்.


உதா: 


மேலே குறிப்பிட்டுள்ள கட்டத்தில் சூரியன் எங்கு உள்ளாரே அதுவே அவர் பிறந்த மாதம்.

உதாரணம்: சூரியன் மேசத்தில் இருந்தால் நீங்கள் பிறந்த மாதம் சித்திரை ஆகும்.



அடிப்படை பாடம்: 4 தொடர்ச்சி

3. நட்சத்திரங்கள்

ஜோதிடத்தில் பனிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 
27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாவது : 
 அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
 பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) 
 கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
 ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு) 
மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
 திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான் 
 புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஷ்ணு) 
 பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) 
 ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 
 மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) 
 பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி 
 உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி 
 ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி 
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி 
விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான் 
அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர் 
 கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) 
 மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
 பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
 உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான் 
திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு) 
அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு) 
சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
 பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
 உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) 
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன் 
4.யோகம்
27 யோகங்கள் உள்ளன்
5.கரணம்
திதியில் பாதி கரணம் எனப்படும்.

கரணம்11 வகைபடும்

இந்த விளக்கங்கள் யாவும் பஞ்ஞாங்கத்தில் உள்ளன....

இனி பஞ்ஞாங்கம் வாங்கிக்கொள்ளுங்கள்...

அடிப்படை பாடம்:4

                                                                பஞ்சாங்கம் 
 
                      பஞ்ஞாங்கம் என்பது 5 அங்கங்கள் கொண்டது.

1.திதி
2.வாரம்
3.நட்சத்திரம்
4.கரணம்
5.யோகம்

1.திதி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.


எண் கிருஷ்ண பட்சம் சுக்கில பட்சம் தெய்வம் மற்றும் செய்ய வேண்டியவை!
1 பிரதமை பிரதமை முதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும் மங்கள காரியங்கள் செய்ய உகந்த நாள்.
2 துவிதியை துவிதியை இது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதர்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மைதரும்.
3 திருதியை திருதியை கெளரிமாதாவுக்கு உகந்த நாள்.சிகை திருத்தம் செய்தல்,முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்ைம தரும்.
4 சதுர்த்தி சதுர்த்தி நான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீள்த்துதல்,தடை தகர்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும்.
5 பஞ்சமி பஞ்சமி இது நாகதேவனின் நாள்,விஷம் முரித்தல்,மருத்துவம் செய்தல் அறுவை சிகிச்சை முதலியன பலன் தரும்.
6 சஷ்டி சஷ்டி நாளின் தெய்வம் முருகன்.புதிய நண்பர்களை சந்தித்தல்,கொண்டாட்டம் கேளிக்கை முதலியன சிறப்பு.
7 சப்தமி சப்தமி சூரியனின் நாள்.பிரயாணம் தொடங்குதல்,பிரயாண படி கேட்டல், முதலிய நகர்தல் சம்மநதமான காரியங்கள் கைகூடும்.
8 அஷ்டமி அஷ்டமி இன்னாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார்.ஆயுதம் எடுத்தல்,அரன் அமைத்தல்,போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகநதது
9 நவமி நவமி அம்பிகையின் நாள்.எதிரிகளை கொல்லுதல்,வினாசம் செய்தல்.
10 தசமி தசமி தர்மராஜாவின் நாள்.மதவிழாக்கள்,ஆன்மீக செயல்கள் நன்மை தரும்.
11 ஏகாதசி ஏகாதசி மஹாருத்ரனின் நாள். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வாவை தியனிதல் சிறப்பு.
12 துவாதசி துவாதசி மஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடய நாள்.விளக்கு ஏற்றுதல், மதவிளாக்கள், பணிகள் செய்தல்.
13 திரயோதசி திரயோதசி மன்மதனின் நாள்.அன்பு செலுதுதல்,நட்பு வளர்தல்.
14 சதுர்த்தசி சதுர்த்தசி காளியின் ஆதிக்கமுடய நாள்.விஷத்தை கைய்யாளுதல்,தேவதைகளை அைழத்தல்.
15 அமாவாசை பௌர்ணமி அமாவாசை பித்ருகளுக்கு காரியங்கள் செய்யவும்.பௌர்ணமி அன்று அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் முதலியன நலம் தரும்.



வளர்பிறைத் திதிகள்

அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான  பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். 








அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருக்கும்.

அமாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12° தூரம் விலகி இருக்கும். அந்நாள் பிரதமை எனப்படும். அதற்கு மறுநாள் மேலும் ஒரு 12° விலகியிருக்கும். அந்நாள் துதியை எனப்படும். மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி.
சந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்பார்கள்.

தேய்பிறைத் திதிகள்

அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.
இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும்.
இவைகள் அனைத்தும் சோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அட்டமி, நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர்.

2.கிழமை (அல்லது வாரம்)

கிழமை (அல்லது வாரம்) என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கால அளவு. கிழமை என்றால் உரிமை என்று பொருள். இந்த ஏழு நாட்களும் வானத்தில் தெரியும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு ஒளிதரும் பொருட்களுக்கு உரிய (கிழமை உடைய) நாளாக பன்னெடுங்காலமாக அறியப்படுகின்றது. இந்த ஏழு பெயர்களும் சுழற்சி முறையில் திரும்பத் திரும்ப வருகின்றன. ஞாயிறு என்பது சூரியனின் பெயர்களில் ஒன்று . இது ஒரு நாள்மீன். எனவே ஞாயிற்றுக்கிழமை கதிரவனுக்கு உரிய நாளாகக் கொள்ளப்படுகின்றது. திங்கள் என்பது நிலாவின் பெயர்களில் ஒன்று[. திங்கட்கிழமை நிலாவுக்கு உரிய நாள். இப்படியாக மற்ற நாட்களும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்னும் ஐந்தும் கதிரவனைச் சுற்றி வரும் கோள்மீன்களுக்கு உரிய நாட்களாக அமைந்துள்ளன.
மேற்கத்திய காலக் கணிப்பு முறைகளிலும், இந்திய முறைகளிலும் கிழமை என்னும் இந்தக் கால அலகு இடம் பெற்றுள்ளது. பொதுவாக பிறமொழிகளிலும் கிழமையில் அடங்கும் நாட்களின் பெயர்கள் சூரியன், சந்திரன் மற்றும் ஐந்து கோள்களின் பெயர்களைத் தாங்கியுள்ளன.

 

தமிழில் நாட்களின் பெயர்களும் அவை குறிக்கும் கோள்களின் பெயர்களும் கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

  1. ஞாயிற்றுக் கிழமை : சூரியன் (தமிழில் ஞாயிறு)
  2. திங்கட் கிழமை : சந்திரன் (தமிழில் திங்கள்)
  3. செவ்வாய்க் கிழமை : செவ்வாய்
  4. புதன் கிழமை : புதன்
  5. வியாழக் கிழமை : வியாழன்
  6. வெள்ளிக்கிழமை : வெள்ளி
  7. சனிக் கிழமை : சனி


 

தமிழ் வருடங்கள் 60

Thursday 29 May 2014
No. Name Name (English)

No. Name Name (English)




01. பிரபவ Prabhava

31. ஹேவிளம்பி Hevilambi
02. விபவ Vibhava

32. விளம்பி Vilambi
03. சுக்ல Sukla

33. விகாரி Vikari
04. பிரமோதூத Pramodhoodha

34. சார்வரி Sarvari
05. பிரசோற்பத்தி Prachorpaththi

35. பிலவ Plava
06. ஆங்கீரச Aangirasa

36. சுபகிருது Subakrith
07. ஸ்ரீமுக Srimukha

37. சோபகிருது Sobakrith
08. பவ Bhava

38. குரோதி Krodhi
09. யுவ Yuva

39. விசுவாசுவ Visuvaasuva
10. தாது Thaadhu

40. பரபாவ Parabhaava
11. ஈஸ்வர Eesvara

41. பிலவங்க Plavanga
12. வெகுதானிய Vehudhanya

42. கீலக Keelaka
13. பிரமாதி Pramathi

43. சௌமிய Saumya
14. விக்கிரம Vikrama

44. சாதாரண Sadharana
15. விஷு Vishu

45. விரோதகிருது Virodhikrithu
16. சித்திரபானு Chitrabaanu

46. பரிதாபி Paridhaabi
17. சுபானு Subaanu

47. பிரமாதீச Pramaadhisa
18. தாரண Thaarana

48. ஆனந்த Aanandha
19. பார்த்திப Paarthiba

49. ராட்சச Rakshasa
20. விய Viya

50. நள Nala
21. சர்வசித்து Sarvajith

51. பிங்கள Pingala
22. சர்வதாரி Sarvadhari

52. காளயுக்தி Kalayukthi
23. விரோதி Virodhi

53. சித்தார்த்தி Siddharthi
24. விக்ருதி Vikruthi

54. ரௌத்திரி Raudhri
25. கர Kara

55. துன்மதி Thunmathi
26. நந்தன Nandhana

56. துந்துபி Dhundubhi
27. விஜய Vijaya

57. ருத்ரோத்காரி Rudhrodhgaari
28. ஜய Jaya

58. ரக்தாட்சி Raktakshi
29. மன்மத Manmatha

59. குரோதன Krodhana
30. துன்முகி Dhunmuki

60. அட்சய Akshaya









































அடிப்படை பாடம்: 3




நமது முன்னோர்கள் வான்வெளியை 12 பாகமாக பிரித்தனர். அதுவே ராசி சக்கரம்..ராசி சக்கரத்தில் ஒவ்வொரு ராசி கட்டத்திற்கும் 30 பாகைகள்.

ஒருவர் பிறக்கும் போது எந்த கிரகம் எந்த கட்டத்தில் எந்த பாகையில் நிற்கிறதோ அதுவே அவருடய ஜாதகம்..

eg:

30.05.2014

கிரக அமைப்பு 

அடிப்படை பாடம்:2

ஜோதிடத்தில் முதலில் தெரிந்து கொல்ல வேன்டடியது

9  கோள்கள்
12 வீடுகள்
27 நட்சத்திரங்கள்

9  கோள்கள்:

சூரியன்
சந்திரன்
செவ்வாய்
 ராகு
குரு
சனி
புதன்
கேது
சுக்கிரன்



12 வீடுகள்:



27 நட்சத்திரங்கள்:

அஸ்வினி, மகம், மூலம்

பரணி, பூரம், பூராடம்

கார்த்திகை,உத்திரம், உத்திராடம்

ரோகிணி,அஸ்தம்,திருவோணம்

மிருகசீரிசம்,சித்திரை,அவிட்டம்

திருவாதிரை,சுவாதி,சதயம்

புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி

பூசம்,அனுசம்,உத்திரட்டாதி

ஆயில்யம்,கேட்டை,ரேவதி


அடிப்படை பாடங்கள் அனைத்தையும் நினைவில் கொள்ளவேண்டும்...தூக்கதில் எழுப்பி கேட்டால் கூட சரியாக சொல்ல வேண்டும்.....


அடிப்படை பாடம்:1

Wednesday 28 May 2014
ஜனன பத்திரிக்கை:



ஜனனீ ஜென்ம சொவ்க்யானாம் வத்தனீ வத்தனீ குலசம்பதாம்
பதவி பூர்வபுன்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா......


ஒவ்வொருடய ஜாதகத்திலும் முதல் பக்கத்தில் இந்த வாசகத்தை எலுதியிருப்பார்கள்....

ஜாதகம் என்பது முன் ஜென்மத்தில் செய்த பாவ , புண்ணியத்தின் பலனாக இந்த ஜென்மத்தில் நல்லது, கெட்டது போன்றவைகளை நாம் அனுபவிக்க நேரிடுகிறது,,..

நல்லது கெட்டதை முன்கூட்டியே அறிந்து கொள்வது தான் ஜோதிடம்...அறிந்து என்ன செய்வது?...

தீயது நடக்குமாயின் அதன் செயல்களை,அதாவது தாக்கத்தை குறைத்து நற்பலன்களை அடைய முற்படுவதாகும்...

சரி தாங்கள் பிறக்கும்போது உங்களுடய பலா பலன்களை கூறும் ஜென்ம பத்திரிக்கைதான் (ஜாதகம்)....