அடிப்படை பாடம்:11

Friday 25 July 2014
பஞ்சவித தானங்கள்: & : கிரக அஸ்தமனம்:



கேந்திரஸ்தானம்: 1, 4, 7, 10 வீடுகள்

திரிகோணம்:  1, 5, 9 வீடுகள்

பணபரம்:  2, 5, 8, 11 வீடுகள்

அபோக்லியம்: 3, 6, 9, 12 வீடுகள்

உபஜெயஸ்தானம்:  3, 6, 10, 11 வீடுகள்

இந்த ஸ்தானங்களை வைத்து என்ன செய்வது?.....அதை பிறகு பார்ப்போம்.... 


 கிரக அஸ்தமனம்:


 சூரியனே அனைத்திற்க்கும் பிராதமானவன். அவன் அருகில் தன் பாதையில் சுற்றி வரும் கிரகங்கள் சூரியனுக்கு மிக அருகில் வரும்போது தன் செயல், சக்திகள் அனைத்தையும் இழந்துவிடுகிறது..

ஜனன ஜாதகப்படி அஸ்தங்கம் பெற்ற கிரகம் நன்மை செய்வதில்லை..கிரகங்கள் சூரியன் இருக்கும் ராசிக்கட்டத்தில் வந்ததும் அஸ்தங்கம் அடைவது இல்லை..சூரியனுக்கு அருகில் சில பாகையில் வரும்போது மட்டுமே அஸ்தங்கம் அடைகிறது..

சந்திரன் - 12 பாகை

செவ்வாய்- 17 "

புதன் - 11 "

குரு - 15 "

சுக்கிரன் - 9 "

சனி - 17 "

ராகு ,கேதுக்கு அஸ்தங்கம் கிடையாது....

அடிப்படை பாடம்:10

Thursday 17 July 2014
கிரகங்களின் விவரம்:





அடிப்படை,,நினைவில் கொள்வது மிக அவசியம்

அடிப்படை பாடம்: 9

Tuesday 15 July 2014
இனி 12 ராசிகளுடய bio data வை பார்ப்போம்.






மே௸ம்:


சாதி=சத்ரியன்
பால்=ஆண்

நிறம்=செம்மை

உதயம்= பிருஸ்டோதயம்

கால்= 4 கால் ராசி

1,2= ஆண் ஒற்றை

பலம்= இரவில் பலமுடயது

திசை=கிழக்கு

நோக்கு=பக்கம் நோக்கும்

சர,ஸ்திர,உபய= சர ராசி

வடிவம்=ஆடு......

ரிசபம்:

 
சாதி=சூத்திரகர்
பால்=பெண்

நிறம்=வெம்மை

உதயம்= பிருஸ்டோதயம்

கால்= 4 கால் ராசி

1,2= பெண் ஒற்றை

பலம்= இரவில் பலமுடயது

திசை=தெற்கு

நோக்கு=பக்கம் நோக்கும்

சர,ஸ்திர,உபய= ஸ்திர ராசி

வடிவம்=மாடு

மிதுனம்:


சாதி=தாழ்த்தப்பட்டோர்
பால்=ஆண்

நிறம்=கருமை

உதயம்= சிரோதயம்

கால்= 2 கால் ராசி

1,2= ஆண் இரட்டை

பலம்= இரவில் பலமுடயது

திசை=மேற்கு

நோக்கு=மேல் நோக்கும்

சர,ஸ்திர,உபய=உபய ராசி

வடிவம்= ஆண்,பெண் 

கடகம்:
சாதி=வைசியன்
பால்=பெண்

நிறம்=வெம்மை

உதயம்=சிரோதயம்

கால்= பல கால் ராசி

1,2= பெண் ஒற்றை

பலம்= இரவில் பலமுடயது

திசை=வடக்கு

நோக்கு=கீழ் நோக்கும்

சர,ஸ்திர,உபய= சர ராசி

வடிவம்=நண்டு

சிம்மம்:
சாதி=சத்ரியன்
பால்=ஆண்

நிறம்=செம்மை

உதயம்= பிருஸ்டோதயம்

கால்= 4 கால் ராசி

1,2= ஆண் ஒற்றை

பலம்=பகலில் பலமுடயது

திசை=கிழக்கு

நோக்கு=பக்கம் நோக்கும்

சர,ஸ்திர,உபய= ஸ்திர ராசி

வடிவம்=சிங்கம் 
 கன்னி:
 
சாதி=தாழ்த்தப்பட்டோர்
பால்=பெண்

நிறம்=கருமை

உதயம்= சிரோதயம்

கால்= 2 கால் ராசி

1,2= பெண் ஒற்றை

பலம்=பகலில் பலமுடயது

திசை=தெற்கு

நோக்கு=மேல் நோக்கும்

சர,ஸ்திர,உபய=உபய ராசி

வடிவம்=கன்னி பெண்

துலாம்:
சாதி=சூத்திரகர்
பால்=ஆண்

நிறம்=வெம்மை

உதயம்= சிரோதயம்

கால்= 2 கால் ராசி

1,2= ஆண் இரட்டை

பலம்=பகலில் பலமுடயது

திசை=மேற்கு

நோக்கு=மேல் நோக்கும்

சர,ஸ்திர,உபய= சர ராசி

வடிவம்=தராசு ஏந்திய ஆண்

விருட்சகம்:

 
சாதி=வைசியர்
பால்=பெண்

நிறம்=பசுமை

உதயம்= சிரோதயம்

கால்= பல கால் ராசி

1,2= பெண் ஒற்றை

பலம்=பகலில் பலமுடயது

திசை=வடக்கு

நோக்கு=கீழ் நோக்கும்

சர,ஸ்திர,உபய= ஸ்திர ராசி

வடிவம்=தேள்

தனுசு:


சாதி=அந்தணர்
பால்=ஆண்

நிறம்=செம்மை

உதயம்= பிருஸ்டோதயம்

கால்= 4 கால் ராசி

1,2= ஆண் இரட்டை

பலம்=இரவில் பலமுடயது

திசை=கிழக்கு

நோக்கு=பக்கம் நோக்கும்

சர,ஸ்திர,உபய= உபய ராசி

வடிவம்=குதிரை மனிதன் கலந்த உருவம்(கையில் வில் ஏந்தி) 
 மகரம்:

சாதி=சூத்திரகர்
பால்=பெண்

நிறம்=கருமை

உதயம்= பிருஸ்டோதயம்

கால்= பறவைகால் ராசி

1,2= பெண் இரட்டை

பலம்=இரவில் பலமுடயது

திசை=தெற்கு

நோக்கு=மேல் நோக்கும்

சர,ஸ்திர,உபய= சர ராசி

வடிவம்=மான் மீண் கலந்த உருவம்

கும்பம்:
சாதி=தாழ்த்தப்பட்டோர்
பால்=ஆண்

நிறம்=கருமை

உதயம்= சிரோதயம்

கால்= 2 கால் ராசி

1,2= ஆண் இரட்டை

பலம்=பகலில் பலமுடயது

திசை=மேற்கு

நோக்கு=மேல் நோக்கும்

சர,ஸ்திர,உபய= ஸ்திர ராசி

வடிவம்=கும்பம் ஏந்திய ஆண்

மீனம்:


சாதி=அந்தணர்
பால்=பெண்

நிறம்=பசுமை

உதயம்= சிரபிருஸ்டோதயம்

கால்= 2 கால் ராசி

1,2=பெண் இரட்டை

பலம்=பகல்&இரவிலும் பலமுடயது

திசை=வடக்கு

நோக்கு=மேல் நோக்கும்

சர,ஸ்திர,உபய=உபய ராசி

வடிவம்=இரண்டு மீன்கள் எதிர் எதிர் திசையில்



பார்த்தீர்களா?

ராசிகளிலேயே இவ்வளவு விசயங்கள் உள்ளன..இன்னும் கிரகங்களுக்கு இதைவிட அதிகம்....அதனால் தான் பொறுமயாக நிதானமாக பயில வேண்டும்....

அடிப்படை பாடம்:8

Monday 14 July 2014
ராசி சக்கரமும் 12 தமிழ் மாதங்களும்:


மேசம் முதல் மீனம் வரை 12 ராசிகள்....
சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்கள்...


1 ராசிக்கு 1 மாதம் வீதம்,12 ராசிக்கு 12 மாதங்கள்.....


சூரியன் ஒரு மாதக்கோள்....அவன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியை கடக்கிரான்...அவன் எந்த ராசிக்கட்டத்தில் இருக்கிரானோ அதுவே அன்றைய மாதம்.....



சூரியன் சரி,,,,மற்ற கோள்களின் கால அளவு (ஒரு ராசியை கடக்க ஆகும் காலம்)?......

தெரிந்தால் சொல்லுங்கள் ,இல்லையேல் பின்பு பார்க்களாம்,,,.

அடிப்படை பாடம்:7

கிரக வீடுகள்



கிரகங்களுக்கு ஏது வீடு?..


உண்டு...ராசி கட்டத்தில் உள்ள 12 வீடுகளும் முதலில் ஆதி பரமேஸ்வரனுக்கும் (6 விடுகள்),பார்வதிக்கும் (6 விடுகள்) மட்டுமே சொந்தமாக இருந்தது..



பின் முதலில் புதன் சிவனிடமும்,பார்வதியிடமும் வேண்டி 2 வீடுகளை பெற்றார்.அது மிதுனம் &  கன்னி

இந்த விசயம் அறிந்த சுக்கிராச்சாரியார் 2 வருரிடமும் வேண்டி ரிசபம் & துலாம் வீடுகளை பெற்றார்..


செவ்வாய் தாமும் முறையிட்டு 2 வீடுகளை பெற்றார் , மேசம் & விருட்சகம்.

பிரகஸ்பதியும் முறையே மீனம் & தனுசு பெற்றார்..

சனி பகவானும் தன் பங்கிற்க்கு 2 வீடுகளை பெற்றார், மகரம் &கும்பம்...

கடைசியில் சிவனாருக்கும்,உமையாலுக்கும் முரையே 1 ,1 வீடுகள் மட்டுமே இருந்தது..


ஆட்சி வீடுகள் போலவே 9 கிரகங்களுக்கும் உச்ச ,நீச & பகை வீடுகள் உள்ளது..







கொஞ்ஞாமாவது உங்களுக்கு வேலை தரவேண்டுமல்லவா....கிரக பகை வீடுகளை கீழே அல்லது facebook ல் கமெண்ட் செய்யுங்கள்.....

அடிப்படை பாடம்:6

Sunday 13 July 2014
பக்௸ங்கள்:

இதுவும் 2 வகை

1.சுக்லபக்௸ம் 
2.அமரபக்௸ம்

சுக்லபக்௸ம்:
                              பிரதமை முதல் பவுர்ணமி வரை.அதாவது அம்மாவாசை முடிந்த மறு நாள் முதல் 15 வது நாள் வரை.

அமரபக்௸ம்:
                            பிரதமை முதல்  அம்மாவாசை வரை.அதாவது பவுர்ணமி முடிந்த மறு நாள் முதல் 15 வது நாள் வரை.


வளர்பிறையில் சுபர் பலவான்.
தேய்பிறையில் பாவிகள் பாலவான்.

சுபர் யார்?.பாவி யார் என்று பின்னே பார்க்களாம்.

அடிப்படை பாடம்:5

அயனங்கள்

2 வகை

1.உத்திராயணம்
2.தக்சிணாயனம்

உத்திராயணம்:
                                  உத்திராயணம் என்பது தை மாதம் முதல் ஆனி மாதம் வரை.

தக்சிணாயனம்:
                                  தக்சிணாயனம் என்பது ஆடி முதல் மார்கழி வரை...


இது என்ன அயனங்கள்?.இதை மனப்பாடம் செய்து நாம் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டாம்..இந்த அயனங்கள் கிரகங்களின் வலிமையை கணக்கிட உதவும்..