நூறு வயது

Wednesday 15 April 2015
நூறு வயது 


இந்த கலியுகத்தில் நூறு வயது வரை வாழ்வது என்பது சற்று சாத்தியம் இல்லாததே. தற்பொழுது உள்ள மக்கள்தொகை பெருக்கத்தாலும் , அவர்களின் நேரமின்மை காரணமாக நேரத்தை சேமிக்க வந்ததே வாகனங்கள் .

நேரம் மட்டும் சேமிக்க்கபடவில்லை , அவர்களின் வாழ்நாளின் நேரமும் சேமிக்கப்பட்டு குறைக்கப்பட்டுவிட்டது . இருப்பினும் நூறு வயதுவரை வாழ்பவர்களும் இருக்கின்றனர் .

அதற்க்கு அவர்களின் ஜாதக ரீதியாக சொல்லப்போனால் , லக்ன அதிபதி வலுவாக இருக்கவேண்டும் .விரிவாக சொல்லப்போனால் லக்னாதிபதி கேந்திரம் , திரிகோணம் பெற்று அவர் அமர்ந்த வீடு பகை இல்லாமல் இருந்து, அவரை சுபர் பார்த்து , அவர் லக்ன பாவர் , பாவ கிரக சாரம் பெறாமல் இருந்தால் அந்த ஜாதகர் ,நினைத்ததை சாதித்து நூறு வயது வரை வாழ்வார்.

யார் யோகக்காரர் ?

Monday 13 April 2015
யார் யோகக்காரர் ?


                                 

உலக மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் அதில் எத்துனை பேர் தாங்கள் நினைத்தபடி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர், தம்முடைய எண்ணங்கள் செயலாக மாறி வாழ்க்கை சந்தோஷமாக வாழ்கின்றனர்  என்று கேட்டால் அது கேள்விக்குறியே !.

ஒருவருக்கு சரியான வயதில் திருமணம் , வேலை , பிள்ளைபேறு என சகலமும் தங்குதடையின்றி நடந்துவிட்டாலே அவர் யோகக்காரர்தான். சகலமும் நல்லதாக நடக்க லக்ன அதிபதி நல்ல நிலையில் இருக்கவேண்டும், கொடுப்பவர் கொடுத்தாலும் அதை அனுபவிக்க நமக்கு நடக்கும் திசை நல்லதாக இருக்கவேண்டும் .

என்னதான் நல்ல திசையாக இருந்தபோதிலும் லக்ன அதிபர் பலமின்றி இருந்தால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதைதான் . அதுபோல லக்னத்தில் லக்ன சுபர் இருந்து அதை சுப கிரகங்கள் பார்த்தால் அவர் மிகுந்த யோகக்காரரே.

வணக்கம் ..........

Sunday 12 April 2015
மிகுந்த வேலை பளு காரணமாக 2 மாதங்களாக வலைதளத்திற்கு வரமுடியவில்லை , அதற்காக மன்னிக்கவும் . மீண்டும் வழக்கம் போல் ஜோதிட தகவல் களஞ்சியம் தமது பணியை  தொடரும் ..ஓம் நமசிவாய ......