லக்னம் பாகம்:5

Sunday 14 September 2014
லக்னம் பாகம்:5



வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது போல,சிரிப்பு என்பது இப்பொழுது நம்மிடையே குறைந்து கொண்டு வருகிறது. ஏன்?. 6 மணிக்கு முன்பே எழுந்து பகல் நேரம், இரவு நேரம் என எதற்கும் நேரம் இல்லாமல் வேலை பார்க்கிறோம்.

அப்படி இல்லையெனில் நம் நண்பர்கள், உறவினர்கள் என அவர்களிடம் கூட பேச நேரமில்லாமல் இணையத்தில் மூழ்கி கிடக்கிறோம். அதனால் ஏற்படும் நன்மை எந்த அளவிற்கு என தெரியவில்லை, எனினும் தீமையே அதிகம்.

உடல் நிலை முதல், மன நிலையும் சேர்ந்து மாறிக்கொண்டே வருகிறது. நாம் நம்மை மறந்து சிரிப்பது எப்போது என கேட்டால், எப்பொழுது நாம் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அப்பொழுது தானாகவே மனதில் இருந்து மகிழ்ச்சி கலந்த சிரிப்பு வரும்.

குழந்தையை பாருங்கள், உங்களை மறந்து சிரிப்பீர்கள், மகிழ்ச்சி அடைவீர்கள். அந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

ஒருவருடைய மகிழ்ச்சியையும் லக்னம் கொண்டு அறியலாம்.

அட இதற்கு ஜாதகம் பார்க்க வேண்டுமா,முகத்தை பார்த்தா தெரியாதா என நீங்கள் கேட்கலாம். ஆனால் ஒருவர் எப்பொழுது மகிச்சி அடைவார், எதைகண்டு மகிழ்ச்சி அடைவார், இல்லை மகிழ்ச்சி என்பதே அவருக்கு கிடையாதா என லக்னம் கொண்டு கண்டறிய முடியும்.


குருவே சரணம்..

0 comments:

Post a Comment