கிரக காலம்

Wednesday 3 September 2014
கிரக காலம்



ஜனன ஜாதகத்தை பார்த்ததும் நமது கண்ணுக்கு முதலில் தெரிவது பன்னிரு ராசிக்கட்டங்களும் அதில் அமர்ந்திருக்கும் கிரகமும் தான். ஒரு குழந்தை பிறக்கும்போது கிரகங்கள் எந்த எந்த ராசிகளில், எந்த எந்த நட்சத்திர பாதத்தில் உள்ளது என நன்கு ஆராய்ந்து கணித்து ஜனன ஜாதகத்தை எழுத வேண்டும்.

கிரகம் இருக்கும் வீடு, கிரகம் அமர்ந்திருக்கும் நட்சத்திர பாதம் என அனைத்து விஷயங்களும் பஞ்ஞாங்கத்தில் இடம்பெற்றிருக்கும். பஞ்ஞாங்கம் இன்றி ஜாதகம் கணிக்க கிளம்பினால் அது முடியாது. ஆகையால் பஞ்ஞாங்கம் மிக மிக முக்கியம்.

தற்பொழுது பல இனையதளத்திலும், சாப்டுவேர் மூலமாகவும் துல்லியமாக ஜாதக கட்டத்தையும் ,கிரக நிலையையும் நாம் பெறமுடியும். ஆனால் இவை அனைத்தும் இல்லாத காலத்தில் நம் முன்னோர்கள் எப்படி கணித்தனர் எனில் பஞ்ஞாங்கத்தின் துணையோடுதான்.

பண்டைய முறைபடி கணிக்க பஞ்ஞாங்கம் அவசியமானது.பொதுவாக நவகிரகங்கள் 12 ராசியையும் ஒரு முறையோடு நட்சத்திர பாதம் வாயிலாக சுற்றி வருகிறது. இதில் அனைத்து கிரகமும் ஒரே மாதிரியாக சுற்றுவதில்லை. ஒரு சில கிரகம் வேகமாகவும்,சில கிரகம் மெதுவாகவும் 12 ராசிகளையும் சுற்றிவருகிறது.

இந்த 12 கட்டங்களையும் முழுமையாக சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரம் கிரகத்திற்க்கு கிரகம் வேறுபடும். 12 ராசியை விடுங்கள் 1 ராசிகட்டத்தை கிரகங்கள் கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவும் மாறுபடுகிறது.

சூரியன் 1 ராசிக்கட்டத்தை கடக்க ஆகும் கால அளவு 1 மாதம் ஆகும். அதாவது 9 நட்சத்திர பாதங்களையும் 1 மாதத்தில் கடக்கிறது. அதுபோல சந்திரன் 2 1/4 நாளிலும், செவ்வாய் 1 1/2 மாதத்திலும், புதன் 1 மாதத்திலும், சுக்கிரன் 1 மாதத்திலும், ராகு,கேதுக்கள் 1 1/2 வருடத்திலும், குரு 1 வருடத்திலும், சனி 2 1/2 ஆண்டுகளிலும் ஒரு ராசிக்கட்டத்தை அதாவது 9 பாதங்களை கடக்கின்றன.

இப்படி மெதுவாகவும், வேகமாகவும் சுற்றி தனது பணியை முழுமையாக செய்கின்றன நவகிரகங்கள்.


குருவே சரணம்..

0 comments:

Post a Comment