லக்னம் பாகம்:1

Tuesday 9 September 2014
லக்னம் பாகம்:1



மனித பிறவி எடுத்த அனைவரும் பாக்கியசாலிகளே. இந்நிலவுலகில் பிறந்த அனைவரும் இறைவனின் அருட்பெரும் கடாக்ஷ்த்தால் பிறந்துள்ளோம். நாம் அனைவரையும் படைத்தது இறைவனானாலும், நாம் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

சிலர் கருப்பாகவும், சிலர் வெள்ளையாகவும், சிலர் குண்டாகவும், சிலர் ஒல்லியாகவும் உள்ளதற்க்கு காரணம், விஞ்ஞானத்தில் ஜீன் என்று கூறுகிறோம்.ஜீன் தான் நமது உயரம்,நிறம் என அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியது.

தற்க்கால விஞ்ஞானத்தின் உதவியோடு குழந்தை பிறக்கும் முன்பே அது எப்படி இருக்கு, சரியாக உள்ளதா,சரியில்லாத ஜீனை மாற்றுகிறார்கள். அதாவது பிறக்கும் முன்பே சரிசெய்துவிடுகிறார்கள்.

ஆனால் நமது முன்னோர்கள் அக்காலத்திலே ஜாதகம் கொண்டு அவர் இப்படிதான் இருப்பார்,இதுதான் அவர் நிறம்,இது தான் அவர் குணம் என அறிவியலாலர்கள் கண்டுபிடிக்காததையும் கூறியுள்ளனர்.

இத்துனை விஷயங்களையும் எப்படி அறிவது, எங்கு அறிவது எனில், ஒருவருடைய ஜாதகத்தை கொண்டு ,லக்ன பாவத்தை கொண்டு இதை அறிய முடியும். அதாவது ஜாதகரை பற்றி முழுமையாக கூறுவது லக்ன பாவகம் ஆகும்.



குருவே சரணம்..

0 comments:

Post a Comment