சிதம்பர ரகசியம்

Sunday 7 September 2014
சிதம்பர ரகசியம்


பிறப்பு இறப்பு என அனைத்தும் இறைவன் செயல். ஒரு குழந்தை பிறந்த ஆங்கில நேரத்தை தமிழாக மாற்றிக்கொண்டு தான் நாம் ஜாதகத்தை கணிக்க ஆரம்பிக்கிரோம். லக்னம் முதல் அனைத்தும் நாழிகை வினாழிகை கணக்குதான்.

நமது முன்னோர்களின் நாழிகை வினாழிகை கணித்ததிலும் சூட்சமம் உண்டு. எதையும் அவர்கள் காரணம் இன்றி செய்யவில்லை. அதை நாம் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இது மூடத்தனம் என்று பிதற்றுகிறோம்.

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் அளவு 21,600. இதற்கும் நாழிகைக்கும் என்ன சம்பந்தம்?.

1 நாழிகை என்பது 24 நிமிடங்கள்
1 நாளுக்கு 60 நாழிகை
30 நாளுக்கு 1800 நாழிகை
1 வருடத்திற்க்கு 21,600 நாழிகை

மனிதனின் ஒரு நாள் சுவாசத்தின் அளவையே ஒரு வருடத்திற்க்கான நாழிகையாக வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். எதிலும் கருத்து இல்லாமல் ,சிந்தனை இல்லாமல் அவர்கள் எதுவும் செய்ததில்லை. அனைத்திற்க்கும் ஒரு காரணம் உண்டு. சிதம்பர ரகசியம் எப்படியோ,இந்த சூட்சமமும் அப்படியே.



குருவே சரணம்..

0 comments:

Post a Comment