லக்னம் பாகம்:3

Thursday 11 September 2014
லக்னம் பாகம்:3




நமது மனம் என்பது ஒரு கண்ணாடி போல, ஏன் எனில் சிறு விஷயம் நம்மை பாதித்தாலும் அது உடனே நொருங்கிவிடும். அதன் வெளிப்பாடே கண்களில் வழியும் நீர். இது பூ போன்ற மென்மையான மனதிற்க்கு.

ஆனால் ஒரு சிலர் இருக்கிறார்கள், அவர்கள் எதையும் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். நம் மனது எப்பொழுதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. தென்றல் காற்றைப்போல் இனிமையாக இருப்பதற்க்கும், சூராவளியை போல் கொந்தளிப்பதற்க்கு நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களே காரணம்.

இந்த மனதை பற்றி காதல் செய்பவர்களிடம் கேட்டால் நன்றாக தெரியும். காதலில் சிறு விஷயம் கூட அவர்களுக்கு எவ்வளவு காயத்தை/கவலையை ஏற்படுத்தும் என்று.

காதலினால் உண்டாகும் கவலை மட்டும் அல்ல, பொதுவாக நாம் ஏன் கவலை படுகிறோம், எதற்காக கவலைபடுகிறோம்  அதாவது நமது மனக்கவலையை ஜனன ஜாதகம் கொண்டு கண்டறிய முடியும்.

அதாவது ஒருவருடைய மனக்கவலையை ஜனன ஜாதகத்தில் லக்னம் கொண்டு அறிய இயலும். இதுபோல 12 வீடுகளும் பல விஷயங்களை உள்ளடக்கியது. முதலில் 12 வீடுகளின் செயல்கள் யாவை என அறிவது அவசியம் அல்லவா. அதனால் தான் இதை கூறுகிறேன். அதன் பின் எப்படி அறிவது என நிதானமாக கற்போம்.


குருவே சரணம்..

0 comments:

Post a Comment