ஜோதிஷம்

Tuesday 2 September 2014
ஜோதிஷம்(எ)ஜோதிடம்



மிகப் பழமையான வேதங்கள் என்று போற்றப்படும் ரிக்,யஜூர், சாம,அதர்வண வேதம் ஆகிய நான்கும் இப்பிறவிக்கு வழிகாட்டும் நான்மறை நூல்களாகும்.

உபநிஷம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய மூன்றும் மறுமைக்கு வழிகாட்டும் நூல்கள் என போற்றப்படுகிறது.

இவற்றுக்கு அப்பாற்ப்பட்டதாக உள்ளவை சிக்‌ஷா, வியாகரணம், நிருத்தம், சந்தஸ், கல்பம், ஜோதிஷம் ஆகிய ஆறு சாஸ்திரங்கள் ஆகும்.

இதற்க்கு அடுத்து வழிவழியே கடைபிடிக்கப்பட்ட கலைகள் 64 ங்கு ஆகும்.

1. எழுத்தியல்புக் கலை

2. லிகிதக் கலை

3. கணிதக் கலை

4. வேதம்

5. புராண இதிகாசம்

6. வியாகரணம்

7. ஜோதிட சாஸ்திரம்

8. தரும சாஸ்திரம்

9. நீதி சாஸ்திரம்

10. யோக சாஸ்திரம்

11. மந்திர சாஸ்திரம்

12. சகுன சாஸ்திரம்

13. சிற்ப சாஸ்திரம்

14. வைத்திர சாஸ்திரம்

15. உருவ சாஸ்திரம்

16. சப்தப் பிரம்மம்

17. காவியம்

18. அலங்காரம்

19. மதுரபாஷணம்

20. நாடகம்

21. நிருத்தம்

22. வீணை

23. வேணுகானம்

24. மிருதங்கம்

25. தாளம்

26. அஸ்திரப் பயிற்சி

27. கனக பரீட்சை

28. ரதபரீட்சை

29. கஜ பரீட்சை

30. அஸ்வ பரீட்சை

31. ரத்ன பரீட்சை

32. பூமி பரீட்சை

33. சங்கிராம இலக்கணம்

34. மல்யுத்தம்

35. ஆகர்ஷணம்

36. உச்சாடனம்

37. வித்வேஷணம்

38. மதன சாஸ்திரம்

39. மோகனம்

40. வசீகரணம்

41. இரசவாதம்

42. காந்தருவ வாதம்

43. பைபீல வாதம்

44. கவுத்துவாதம்

45. தாதுவாதம்

46. காருடம்

47. நஷ்டப்பிரசன்னம்

48. முட்டி சாஸ்திரம்

49. ஆகாயப் பிரவேசம்

50. ஆகாய கமனம்

51. பரகாயப் பிரவேசம்

52. அதிருசியம்

53. இந்திரஜாலம்

54. மகேந்திர ஜாலம்

55. அக்கினிஸ்தம்பனம்

56. ஜல ஸ்தம்பனம்

57. வாயு ஸ்தம்பனம்

58. திருஷ்டி ஸ்தம்பனம்

59. வாக்கு ஸ்தம்பனம்

60. சுக்கில ஸ்தம்பனம்

61. கன்ன ஸ்தம்பனம்

62. கட்க ஸ்தம்பனம்

63. அவஸ்தை பிரயோகம்

64. கீதம்

இந்த 64 கலைகளில் ஜோதிடம் 7 வது கலையாக இருப்பதைக் கொண்டே அதன் மகத்துவத்தை அறியலாம்.

இதன் மகிமையை அறிந்துதான், அக்காலத்தில் அரசர்பெருமக்கள் தங்களது அரசவையில் ஆஸ்தான ஜோதிடர்களை நியமித்து, செம்மையாக ஆட்சி புரிந்தும், போர் துவங்கும் முன் தகுந்த நேரம் பார்த்து போர் புரிந்தும் பல தேசங்களை தம் கைவசம் கொண்டனர்.

பிற்காலத்தில் அரசு மாற மாற ஜோதிடத்தின் மகிமையும், ஜோதிடரின் மகிமையும் உணராது அவர்களை உதாசினபடுத்தி அதன் விளைவாக அரசு மாற்றம்,இழப்பு போன்றவற்றை அனுபவித்தனர்.

இந்த ஜோதிடக் கலையானது 18 சித்தர்களால்(அத்திரி, ஆங்கிரஸர், வசிஷ்டர்,நாரதர், காசியபர், அகஸ்தியர், போகர், புலிப்பாணி, வியாசர், பராசரர், ரோமர், கற்கர், புகர், சவுனர், கெளசிகர், ஜனகர், நந்தி, ஜெயமுனி ) வழிவழியே வளர்க்கப்பட்டு வந்தது.

இவர்கள் எழுதிய ஜோதிட மூல நூலகள் யாவும் காலம் மாற மாற நசிந்து போய் விட்டன.

இப்போது பெரும்பாலோரால் ஏற்று கடைபிடிக்கப்பட்டு வரும் மூல நூலகள் மூன்று , 1. பிருகுத் ஜாதகம் (வராகி மிகிரர்), 2. சாராவளி (கல்யாண ராமன்), 3. சாதக அலங்காரம் (கீரனூர் நடராஜன்).

முதன் முதலில் பஞ்ஞாஙகம் எழுதி வெளியிட்டவர்கள் ஆரியபட்டரும்,வராகிமிகிரரும் ஆவர்.

இவ்வளவு மேன்மை பொருந்திய ஜோதிடக்கலையை போற்றுவோம்.


குருவே சரணம்.. 

0 comments:

Post a Comment