உதயாதி நாழிகை

Wednesday 3 September 2014
உதயாதி நாழிகை



ஜோதிடத்தின் முதல் படியாக இருப்பது ஜனன நாழிகையை கண்டறிவது. ஜோதிடம் கற்க்க விரும்புவோர் முதலில் இதை தெளிவாக புரிந்து தெளிய வேண்டும். இந்த கணித்தில் தவறு செய்தால் லக்னம் முதல் பலாபலன் வரை அனைத்தும் தவறாக மாறிவிடும். அதாவது தவறான ஜாதகத்தை கணித்தாற்போல் ஆகிவிடும்.முதலில் புரிந்து தெளியுங்கள்.

ஆண் பெண் பிறப்பு என்பது ஆண்டவனின் கட்டளையின் படி, அவர் அவர் விதிப்படி குழந்தைகள் பிறக்கின்றது. ஆனால் விஞ்ஞானமோ அதற்க்கு வேறு ஒரு சூட்சமத்தை சொல்கிறது. ஒரு குழந்தை ஆணாக பிறக்க வேண்டுமெனில் X+Y க்ரோமோசோம் சேரவேண்டும்,அதுவே பெண்ணாயின் X+X க்ரோமோசோம் சேரவேண்டும்.

இவ்வாறு பிறக்கும் குழந்தை ஆணாயினும் சரி,பெண்ணாயினும் சரி அவர்கள் பிறந்த நேரமே உதயாதி நாழிகை. இதை கணிப்பது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல.பொதுவாக ஆங்கில நேரத்தை நாழிகையாக மாற்றத்தெரிந்தால் போதும். நாழிகை வினாழிகை கணக்கை ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.

பிறந்த குழந்தையின் உதயாதி நாழிகையை கண்டறிய அவர்களது பிறந்த நேரமும், பிறந்த ஊரும்,அன்றைய சூரிய உதயமும்(இது ஊருக்கு ஊர் வேறுபடும்),பஞ்ஞாங்கமும் இருந்தால் போதுமானது.

சரி உதயாதி நாழிகையை எப்படி கணிப்பது?.

உதாரணமாக : ஒரு குழந்தை 3.09.2014 அன்று,அதாவது இன்று ஆத்தூரில் பிறக்கின்றது, பிறந்த நேரம் காலை 10.30 மணி,இன்றைய சூரிய உதயம்(ஆத்தூர்) 6.06 மணி(இதை பஞ்ஞாங்கத்தில் காணலாம்).

1. முதலாவதாக சூரிய உதயம் முதல் குழந்தை பிறந்த நேரம் வரை எவ்வளவு மணி நேரம் ஆகியுள்ளது என கண்டறியவும்.

குழந்தை பிறந்த நேரம்=    10.30
சூரிய உதயம்          = (-) 6.06
                             _______
                              4.24
                             _______

அதாவது சூரியன் ஆத்தூரில் உதயமாகிய பின் 4 மணி நேரம் 24 நிமிடத்தில் குழந்தை பிறந்துள்ளது.


2.இரண்டாவதாக நாம் கண்டறிந்த நேரத்தை நாழிகை வினாழிகையாக மாற்ற வேண்டும்.இதை எளிதாக மாற்ற மணியையும்,நிமிடத்தையும் 2.5 ஆல் பெருக்கினால் போதும்.

4*2.5  = 10 நாழிகை
24*2.5 = 60 வினழிகை (அ) 1 நாழிகை

இவை இரண்டையும் கூட்ட வருவது (10 நாழிகை+1 நாழிகை=11 நாழிகை)

ஆக இன்று ஆத்தூரில் காலை 10.30 மணிக்கு பிறந்த குழந்தையின் உதயாதி நாழிகை 11 ன்று ஆகும். இவ்வாறே உதயாதி நாழிகை கணித்தல் எளிதானது. தங்களது பிறந்த நேரம், அன்றைய சூரிய உதயத்தை உங்கள் ஜாதகத்தில் பார்த்து அவர்கள் கணித்த உதயாதி நாழிகையை எப்படி கணித்தார்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்.


குருவே சரணம்..




                         


5 comments:

  1. Venkat .R said...:

    அருமையான விளக்கம்

  1. குழந்தை அன்று ஸூர்ய உதயத்திற்கு முன்னால் பிறந்திருந்தால் எப்படி கணிப்பது?

  1. நல்ல கேள்வி..... குழந்தை இன்றைய சூரிய உதயத்திற்கு முன்பு பிறந்திருந்தால் அது நேற்றைய கணக்கில் பிறந்ததாக அர்த்தம். சோதிட காலண்டர்படி ஒரு நாள் என்பது ஒரு சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயத்திற்கு முன் வரை உள்ள காலம் தான் ஒரு நாள் ஆகும். எனவே சூரிய உதயத்திற்கு முன் பிறந்திருந்தால் முதல்நாள் பஞ்சாங்கத்தில் அன்றைய சூரிய உதயம் எத்தனை மணிக்கு என்று போட்டிருக்கிறது என்று பார்த்து அதிலிருந்து குழந்தை பிறந்த நேரத்தை இதே முறைப்படி கணக்கிடலாம்... நன்றி

  1. Unknown said...:

    ஏன்? 2.5 ஆல் பெருக்குகிறோம்?

  1. Anonymous said...:

    1 hrs = 2.5 nazhigai

Post a Comment