லக்னம் பாகம்:4

Saturday 13 September 2014
லக்னம் பாகம்:4






மனித குலத்தில் பிறப்பு இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. மனிதற்கு மட்டும் அல்ல, இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். என்ன சில உயிர்கள் நீண்ட காலம் வாழும், சில பிறந்து ஒரு நாளில் இறந்து போகும் ஈசலை போல.

ஆக பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்பதும் உண்டு. அதை நாம் தவிர்க்க முடியாது. ஜோதிடத்தில் மனிதற்களின் ஆயுலை கணக்கிட்டு தான் தசா புத்திகளை 120 வருடம் வகுத்து உள்ளனர்.

ஆனால் யாரும் அவ்வளவு காலம் வாழ்வதில்லை. ஒரு தனிப்பட்ட மனிதனின் ஆயுள் எத்தனை ஆண்டுகள்?.பிறந்து சில நாட்களில் இறப்பானா, இல்லை சில மாதமா, இல்லை அவனது ஆயுள் காலம் எவ்வளவு என எப்படி அறிவது?.

ஒருவரது ஜனன ஜாதகம் கொண்டு ,அதில் முதற்பாவமான லக்னம் கொண்டு அறியலாம். லக்னம் மட்டும் வைத்து கணக்கிட முடியாது. லக்னமும் இன்னும் சில காரணிகளை கொண்டு கணக்கிட முடியும். ஆக லக்னமும் ஆயுள் நிர்ணயத்திற்கு முக்கியம்.



குருவே சரணம்..   

0 comments:

Post a Comment