பலன் தரும் காலம்

Monday 1 September 2014
கிரகங்கள் பலன் தரும் காலம்



ஜோதிடம் தனி மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பாக உள்ளது. அதாவது அவன் வாழ்க்கை தீபம் போல ஒளிருமா இல்லை இருள் சூழ்ந்த கரு மேகம் போல திகழுமா என அனைத்து விஷயங்களையும் ஜோதிடம் நமக்கு வழங்குகிறது.

இவை அனைத்தும் நவகிரகங்களின் ஆதிக்கத்தாலே நமக்கு நடக்கிறது. நமக்கு நல்லது நடக்குமாயின் நல்ல தசா புத்தி வரவேண்டும், சுப கிரகங்கள் நம்மை ஆட்கொள்ளவேண்டும்,அவர்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

கோசாரமாயினும்,தசா புத்தி ஆயினும் அவர்கள் பலன் தர சில காலம் என்பது உண்டு. நல்ல நிலையில் கிரகங்கள் வந்ததும் அவர்களது பலன்களை எடுத்து நடத்தமாட்டார்கள்.

எனக்கு குரு லாபஸ்தானத்தில் இருக்கிறார், நல்ல நிலையில் இருக்கிறார் வாரிவழங்கப்போகிறார் என நினைத்தால் அது நடக்காது. ஏன் எனில் அவர்கள் பலனை வழங்குவதற்க்கும் காலம் வரவேண்டும்.அப்படி நடந்தால் தான் நமக்கு வசந்தகாலம். அப்படி நல்லது நடப்பதற்க்கும் பல சூட்சமங்கள் உண்டு.

நவகிரகங்களில் சூரியனும்,செவ்வாயும் தனது தசா ஆரம்பகாலத்தில் பலன் தருவார்கள். சந்திரனும்,புதனும் தசா ஆரம்பம் முதல் கடைசி வரை பலன் தர வல்லவர்கள். குருவும், சுக்கிரனும் தனது தசா மத்திம காலத்தில் பலன் தருவார்கள். சனி,ராகு, கேது ஆகிய மூவறும் தனது தசா கடைசி காலத்தில் பலன் தருவார்கள்.

இப்படியே நவகிரகங்களும் தங்களுக்கு உரிய காலங்களில் பலனை தருவார்கள்.


குருவே சரணம்..

1 comments:

Post a Comment