கிரக அவஸ்தை

Wednesday 3 September 2014
கிரக அவஸ்தை



நவகிரகங்களும் பன்னிரு ராசிகளிலும் ஒரு சரியான முறையில் சுற்றி ,மீண்டும் தான் இருக்கும் இடத்திற்க்கே வருகின்றன. நாம் சாப்பிடுவதை நிறுத்தினாலும்,எது எப்படி இருந்தாலும் கிரகம் தான் சுற்றுவதையும் அதன் பலன்களையும் தருவதை நிறுத்தாது.

இப்படி தனது வேலையை செம்மையாக செய்துகொண்டிருக்கும் கிரகம் தனது சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும்போது குறிப்பிட பாகையில் குறிப்பிட்ட இடத்தை அடையும் போது அது தனது சுய சாரத்தை இழந்து தீமையான பலான்களை கொடுக்கிறது.

அதாவது ஒரு சுபகிரகம் நல்ல நிலையில் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட பாகையை கடக்கும்போது நல்ல பலன்களை தருவதற்க்கு பதிலாக தீய பலன்களே தரும்.

ஐந்து விதமான கிரக அவஸ்தகள் உண்டு, அது ஆண் ராசிக்கும் பெண் ராசிக்கும் வேறுபடும்.

ஆண் ராசிக்கான அவஸ்தைகள்:

அவஸ்தை                      பாகை

1. பால்ய அவஸ்தை=1 முதல் 6 பாகை வரை

2. கெளமார அவஸ்தை=7 முதல் 12 பாகை வரை

3. யெளவன அவஸ்தை=13 முதல் 18 பாகை வரை

4. விருத்த அவஸ்தை=19 முதல் 24 பாகை வரை

5. மிருத்யு அவஸ்தை=25 முதல் 30 பாகை வரை


(ஒரு ராசிக்கட்டத்திற்க்கு மொத்தம் 30 பாகைகள்,12 ராசிகட்டத்திற்க்கு 360 பாகை(12*30=360))

பெண் ராசிக்கான அவஸ்தைகள்:

அவஸ்தை                      பாகை

1. மிருத்யு அவஸ்தை=1 முதல் 6 பாகை வரை

2. விருத்த அவஸ்தை=7 முதல் 12 பாகை வரை

3. யெளவன அவஸ்தை=13 முதல் 18 பாகை வரை

4. கெளமார அவஸ்தை=19 முதல் 24 பாகை வரை

5. பால்ய அவஸ்தை=25 முதல் 30 பாகை வரை

மேற்கூறிய அவஸ்தைகளில் மிருத்யு, விருத்த அவஸ்தை தவிர மற்ற மூன்று அவஸ்தைகளும் சுபமானவை. கிரகங்கள் அந்த மூன்று இடங்களையும் கடக்கும்போது சுப பலன்களே தரும், அது சுபகிரகமாக இருப்பின்.

ஆனால் சுப கிரகமாகவே இருந்தாலும், நல்லபலன் தரும் நிலையில் இருந்தாலும் ஆண் ராசியில் கடைசி 12 பாகையும், பெண் ராசியில் முதல் 12 பாகையும் சுப பலன் தரா.

இந்த அவஸ்தைகள் கிரக பெயர்ச்சி மற்றும் ஜனன ஜாதகத்திற்க்கும் பொருந்தும். அதனால் லாபஸ்தானத்தில் குரு அள்ளித்தருவார் என கிரக பெயர்ச்சி ஆனதும் உட்கார்த்து எதிர்பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம். எதிர்பார்ப்பு நடக்கும் எப்பொழுது எனில் அவர் அவஸ்தையில் இருந்து மீண்ட பின்னர்.


குருவே சரணம்..






0 comments:

Post a Comment