ஜோதிட தகவல்: கிரகணத்தில் ருது பலன்

Sunday 28 September 2014
தியாஜ்ய காலம்,சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய காலத்தில் பெண் ருதுவோ (அ) பிறந்தாலோ ஏற்படும் பலன்கள்:





தியாஜ்யகாலம் என்பதற்கு "விஷகாலம்" என்பது பொருள். அதாவது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 நாழிகைகள் விஷ நாழிகை எனப்படும். அந்த விஷநாழிகையில் ஒரு பெண் ருதுவானாலும் அல்லது ஜனனம் ஆனாலும் துன்பமே நேரும்.

அந்த 4 நாழிகையில், முதல் நாழிகையில் இது(ருது (அ) பிறப்பு) நிகழ்ந்தால் தந்தைக்கு மரணமும், இரண்டாவது நாழிகையில் நிகழ்ந்தால் தாய்க்கு மரணமும், மூன்றாவது நாழிகையில் இது நிகழ்ந்தால் தன நாசமும், நான்காவது நாழிகையில் இது நிகழ்ந்தால் தனக்கே அழிவும் உண்டாகும்.

அதுபோல சூரிய கிரகணம் நிகழும்போது ஒரு பெண் ருதுவானாலோ அல்லது பிறந்தாலோ தந்தைக்கு மரணமும், சந்திர கிரகணம் நிகழும்போது ஒரு பெண் பிறந்தால் அல்லது ருதுவானால் தாய்க்கு மரணமும் உண்டாகும் என சாஸ்திர நூல் தெரிவிக்கின்றது. 



குருவே சரணம்..

0 comments:

Post a Comment