கிரக உறவு

Monday 1 September 2014
கிரகங்களின் உறவு முறைகள்




நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரை நவகிரகங்கள் ஆதிக்கத்தினாலேயே நாம் வாழ்கிறோம். அவர்கள் நமக்கு நல்லதும்,கெட்டதும் நம் முன்வினை பாவபுண்ணியத்தைபொறுத்தே தருகின்றனர்.

நமது கூடப்பிறந்தவர்களையும், நம்மை பெற்றொடுத்தோரையும் எப்படி முறைகொண்டு உடன்பிறப்புகள் மற்றும் தாய்,தந்தை என்று அழைக்கிறோமோ, அதுபோல நவகிரகங்களும் உறவுமுறைகொண்டே விளங்குகின்றன.

தேவகுரு என போற்றப்படும் குருபகவானும்,அசுரகுரு என போற்றப்படும் சுக்கிர பகவானும், தினமும் தேய்ந்தும், வளர்ந்தும் வருகிற சந்திர பகவானும் சூரியனுக்கு சிறுதந்தையராம்.

வித்தைகாரகன் என போற்றப்படும் புத பகவான் சூரியனுக்கு சகோர முறை ஆவார்.

கொடியோர் என மக்கள் கண்டு பயப்படும் சனி,ராகு,கேது ஆகிய மூவரும் சூரியனின் புதல்வர்களாகும்.சகோதர காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் சூரியனுக்கு கொள்ளுப்பேரனாவார்.

இவ்வாறு நவகிரகங்களும் உறவுமுறை கொண்டு விளங்குகின்றன.நாம் எப்படி சிலரிடம் மனஸ்தாபம் கொண்டு அவர்களுக்கு பகையாக இருக்கிறோமோ அதுபோலவே நவகிரகங்களும் சில கிரகத்திற்க்கு சில கிரகம் பகை கொண்டு விளங்குகின்றன.

என்னதான் அவர்கள் பகை கொண்டாலும், உறவு முறை கொண்டு விளங்கினாலும் இறைவன் அவர்களுக்கு இட்ட கட்டளையான காரகத்தை முறையே செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.


குருவே சரணம்..

0 comments:

Post a Comment