ஜோதிட தகவல்: அம்மன்

Wednesday 1 October 2014
கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் :நவராத்திரி விழா:






பரிவேட்டை[பூஜை எடுப்பு/ பாணாசூரன் வதம்] ,3-10-14.


நவராத்திரி விழாவின் 10ம் திருவிழாவான 3-10-14 வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.30 மணிக்கு அன்னதானமும், மதியம் 12 மணிக்கு அம்மன் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம்[கன்னியாகுமரி அருகில் ] நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்று பரிவேட்டை[பூஜை எடுப்பு/பாணாசூரன் வதம் ] நிகழ்ச்சி நடைபெறும்..

பகவதி என்பது பொதுவாக பெண் தெய்வங்களை அழைக்கும் ஓர் சொல். மந்திர வடிவான வாலை புவணை திரிபுரை என்ற லட்சுமி சரஸ்வதி துர்கை என்ற இந்த மூன்று தெய்வங்களின் மந்திர சக்தியே பகவதி என்பதாகும்.பகவதி அம்மன் என்று நாம் கூறும் போது அவள் இந்த மூன்று சக்திகளில் ஒன்றாகவோ அல்லது மூன்றுமாகவோ கருதப்படுவாள். அதனால் தான் பெரும்பாலான பெண் தெய்வங்களின் மந்திரங்களின் நடுவே பகவதி என்ற சொல் இனைக்கப்பட்டுள்ளது.நவராத்திரி விழாவின் 10ம் திருவிழாவான 3-10-14 வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 

தொடர்ந்து காலை 6 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.30 மணிக்கு அன்னதானமும், மதியம் 12 மணிக்கு அம்மன் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம்[கன்னியாகுமரி அருகில் ] நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்று பரிவேட்டை[பூஜை எடுப்பு/பாணாசூரன் வதம் ] நிகழ்ச்சி நடைபெறும்.இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ... 

கன்னியாகுமரிஅன்னை மாயம்மா சித்தர்[கன்னியாகுமரி-சித்தர்/கன்னியாகுமரி கடற்கரையில் வாழ்ந்த சித்த புருஷி அன்னை மாயம்மா மாயி ] :ஒழுங்காக வாரப்படாததால் பறக்கும் கேசம், கந்தலைவிட மோசமாகத் தென்படும் உடை, தோற்றத்தில் வினோதமாக அமைந்த சுருக்கங்கள்.. இப்படித்தான் தோற்றமளித்தார் மாயம்மா. தபோ வனத்தில் தம்முடைய அதிஷ்டானத்தை அமைத்துக் கொண்ட சத்குரு ஞானானந்தகிரி சுவாமிகள், ஒரு முறை தன் பக்தர்கள் கேட்டபோது சொன்னார். கன்யாகுமரி கோயிலில் பகவதியாக இருப்பவள்தான், கடற்கரையில் மாயம்மாவாக உலவி வருகிறாள் என்று. மகான்களைப் பற்றி மகான்களே அறிவார்கள் போலும். இறையருள் பெற்று பகவதியம்மன் பார்வையிலேயே இருந்த மாயம்மாவை பலரும் கண்டுகொள்ளவில்லை. தன்னை எவரும் வந்து வணங்கவில்லையே என்று மாயம்மா வருந்தியதும் இல்லை. எனது பிள்ளைகளைப் பாதுகாத்திடவே நான் இங்கு வந்தேன் என்பதே மாயம்மாவின் கூற்று. ஒருநாள் மாயம்மா, பகவதியம்மன் கோயிலின் உணவு விடுதியில் மதிய உணவை உட்கொண்ட சமயத்தில், அங்கு வந்த ஒரு தொழிலாளி வயிற்று வலியால் துடித்தபடி உருண்டு புரண்டான். 

மாயம்மா அவனிடம், எழுந்திரு மகனே, இந்த உணவை உட்கொள்! என்று தனது கைப்பிடி சோறை அந்தத் தொழிலாளிக்கு வழங்கினார். அதனை வாங்கி உண்ட அந்தத் தொழிலாளியின் வயிற்றுவலி சட்டென்று நீங்கியது. இந்நிகழ்வே, மாயம்மாவின் கருணை உலகமெங்கும் பரவ காரணமாக அமைந்தது.ஒருசமயம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பஸ் ஒன்று, சாலையில் படுத்திருந்த நாயின் மீது ஏறி இறங்கியது. பஸ் ஏறியதால், குடல் வெளியே வந்து உயிருக்குப் போராடிய நாயை அங்கு இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். மாயம்மா, அடிபட்டுக் கிடந்த நாயைத் தூக்கி தனது மடியில் கிடத்தி, நாயின் குடலை வயிற்றுக்குள் தள்ளி, தான் வைத்திருந்த வைக்கோலால் நாயின் கிழிந்த வயிற்றைத் தைத்து, தனது கையில் இருந்த கிழிந்த துணிகளைக் கொண்டு காயம்பட்ட பகுதிகளைச் சுற்றிக் கட்டினார். பின்னர், நாயின் உடலை நீவி விட்டார். அவ்வளவுதான்! மடியில் கிடந்த நாய், துள்ளிக்குதித்து எழுந்து ஓடியது. இந்நிகழ்வுக்குப் பின்னர், மாயம்மாவைச் சுற்றி நாய்கள் கூட்டமும் மிகுந்த அன்புடன் சுற்றிவர ஆரம்பித்தது. இப்படி பல சம்பவங்களைச் சொல்லலாம்.இதன்பின்னர், பக்தர்களின் கூட்டம் அவரை நாடி வந்தது. தன்னை நாடிவந்த அடியவர்களை மாயம்மா நல்வழிப்படுத்தியதுடன், தடுமாறுபவர்களை தனது அருளால் திருத்தவும் செய்தார். 

இந்நிலையில், அவரது பக்தரான ராஜமாணிக்கம், கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மாயம்மா தங்குவதற்கு கடற்கரையில் குடில் அமைத்துக் கொடுத்தார். இதன்பின்னர், அன்னை மாயம்மாவின் நினைவாக அவர் வாழ்ந்த கன்னியாகுமரியில் தனிக் கோயில் எழுப்பப்பட்டு இன்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அன்பின் உருவமான அன்னை மாயம்மாவை வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. திருமணம், புத்திர பாக்கியம், தொழில் அபிவிருத்தி என பல்வேறு கோரிக்கைகளுடன் வந்து பக்தர்கள் அன்னையை வணங்கிச் செல்கின்றனர்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் ஜனாதிபதிகள் ஜெயில் சிங், வி.வி.கிரி ஆகியோரால் தேடிவந்து வணங்கப்பட்டவர்... தமிழ் திரையுலகத்தினர் சிலரால் இப்போதும் துதிக்கப்படுகிறவர்... 

மனிதர்களுக்கு இணையாக நாய்களையும் மதித்து அன்பு காட்டி, சமகாலத்தில் வாழ்ந்து, 1992-ம் ஆண்டு பிப்ரவரி ஒன்பதாம் தேதி ஜீவன்முக்தி அடைந்த ஜீவகாருண்ய சொரூபிதான்... இந்த அன்னை மாயம்மா! பூண்டி மகான், கசாவனம்பட்டி மௌனஜோதிகள், கோடி சாமிகள், மருந்துவாழ்மலை நாயனார் சுவாமிகள் ஆகிய மகான்களால் 'கன்னியாகுமரி அம்மன்!’ என்று அழைக்கப்பட்டவர் மாயம்மா ... கன்னியாகுமரியில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது மாயம்மா சமாஜம் ...


தகவல் அளித்தவர்,

சிவ .அ.விஜய் பெரியசுவாமி ,
கல்பாக்கம் ,9787443462
....சிவாய நம......

0 comments:

Post a Comment