யோகம்

Wednesday 29 October 2014
யோகம்


கேளப்பா ஈரைந்தில் முகோள் நிற்க

கெதியுள்ள சன்னியாசி யோகம்யோகம்

ஆளப்பா அத்தலதில் இருகோள் நிற்கில்

அப்பனே தபசியடா யோகிஞானி

கூளப்பா ஒரு கோளும் குணமாய்நிற்கில்

குவலயதில் புனிதனடா ஞானியோகி

வீளப்பா விண்ணுலகத் தேவரோடு

விதமாக வீற்றிருப்பான் ரிஷிகளோடே

இன்னுமொரு கருத்தைக் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்குப் பத்தாமிடத்தில் மூன்று கிரகங்கள் நிற்க கெதிதருகின்ற சன்னியாசி யோகம் என்பர். அதே பத்தாம் இடத்தில் இரண்டு கிரகங்கள் இருப்பின் தபசியாகவும், யோகியாகவும், ஞானியாகவும் இருப்பான். மற்றும் அதே இடத்தில் ஒரு கோள் பலம் பெற்று குணமாக இணக்கத்துடன் நின்றால் அவன் அந்நிலவுலகில் புனிதனாகவும் ஞானியாகவும் யோகியாகவும் விளங்குவதோடு விண்ணுலகில் உள்ள தேவர்களோடு சகல வரிசைகளுடன் ரிஷிகளின் கூட்டத்துடன் உடன் உறைவான்.


0 comments:

Post a Comment