புலிப்பாணி ஜோதிடம்: 7ம் பாவம்

Wednesday 8 October 2014
புலிப்பாணி ஜோதிடம்: 7ம் பாவம்



சப்தமத்தின் பலன்கேளூ மணமதாகும்

தகுமடந்தை புதல்வர்க்குச் சான்றுமின்பம்

சித்தமுள வுபகார மனஞ்சுற்றத்தார்

அபிமானமரசரது சேர்சன்மானம்

தத்துகயல் விழிமாது சேர்க்கைநன்றாய்

சதிருடனே தான் வந்து சேருமென்று

கொத்தாக நீயறிந்து கூறுவாயேல்

குறிதப்பா பலன் வந்து கூடுமன்றே.

சப்தமஸ்தானம் என்னும் ஏழாம் இடத்தினால் ஏற்படும் பலன்களாவன: மணம் நிகழ்தலும் நல்ல மனைவியும், புதல்வர்கள் வாய்த்தலும் அவர்களால் இன்பம் வாய்த்தலும் சுற்றத்தார் உறவு அதிகமாதலும் அவர்களது அபிமானம் நேருதலும் அரச சன்மானம் வாய்த்தலும் போகஸ்திரீகள் வாய்த்தலும் நிஷ்களங்கமின்றி வந்து சேரும்.

0 comments:

Post a Comment