உபய ராசி: பாதகஸ்தானம்

Friday 24 October 2014
உபய ராசி: பாதகஸ்தானம்


செப்புவாய் உபயத்தில் செனித்தபேர்க்கு

சிறந்ததொரு சப்தமனு மாகாதாப்பா

ஒப்புவாய் உலகத்தில் அவதிமெத்த

ஊழ்வினையைத் தடுபாரு முலகிலுண்டோ

தப்புவாய்திடல் நாசம் தனமும் நாசம்

தார்வேந்தர் பகையுமுண்டு தேகதுன்பம்

இப்புவியில் போகருடன் கடாஷத்தாலே

இடமறிந்து திசையறிந்து யியம்புவாயே.

உபயராசியில் ஜனித்த ஜாதகருக்கு சப்தம கேந்திராதிபதி நற்பலன்களைத் தரமாட்டார். அதனால் அவனியில் மிகுந்த அவதியுண்டாகும். ஊழ்வினைத் தடுக்கவல்லவர் உலகில் யாரே உளர்? (இல்லையன்றோ) கிடைக்கத் தக்க வருவாய் கிடைக்காமல் போதலும் தொழில் நாசமும், தன நாசமும், அரசர் பகையும் தேகத்தில் நோய் உபாதைகள் ஏற்படுதலும் நேரும். எனினும் கிரக நிலவரத்தை நன்கு ஆராய்ந்தறிந்து என் சற்குருவான போகர் அருளாணையாலே நான் கூறும் கருத்தினை திசாபுக்தி தெரிந்து கூறுவாயாக.

(சர ராசிகள்:   மேஷம்,கடகம், துலாம்,மகரம்
ஸ்திர ராசிகள்: ரிஷபம, சிம்மம், விருட்சகம்,கும்பம்
உபய ராசிகள்:  மிதுனம், கன்னி, தனுசு, மீனம்)

இந்த மூன்று விதமான ராசிகளில் எந்த ராசியை லக்னமாக கொண்டுள்ளார்களோ அதற்குரிய பாதகஸ்தானமும் பலனும் சொல்லப்பட்டிருக்கிறது. 

உதாரணம்: மேஷம் லக்னம் என்பது சரராசி:பாதகஸ்தானம் 11ம் இடம்.


0 comments:

Post a Comment