ஜோதிட தகவல்: ஆயுத பூஜை

Wednesday 1 October 2014
ஜோதிட தகவல்: ஆயுத பூஜை






சரஸ்வதி பூஜை

ஆதிபராசக்தியின் தீவிர பக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறைமாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவே விளங்கி வந்தனர்.

சுதர்சனனுக்கு தன் மகள் சசிகலையை மணம் முடித்து வைத்தார் சுபாகு. இதனைக் கண்டு கோபம் கொண்ட யுதாஜித் மற்றும் அவரது மகன் சந்திரஜித் ஆகியோரை பராசக்தியே நேரில் தோன்றி வதம் செய்தார்.

பிறகு பராசக்தி அன்னை சுதர்சனனிடம், அயோத்தி சென்று, அங்கு நீதியுடன் அரசாளவும், தினமும் நாள் தவறாமல் தனக்கு பூஜை செய்யும் படியும் கட்டளை இட்டாள். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி விழாவின் போதும், அஷ்டமி, நவமி, சதுர்த்தி தினங்களில் தனக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் படியும் அன்னை கேட்டுக் கொண்டாள்.
அவ்வாறே அன்னையின் ஆணைப்படி, ஆகம முறைப்படி அனைத்துவிதமான பூஜைகளையும் அன்னைக்கு செய்து வழிபட்டார் சுதர்சனன். அம்பிகையின் பெருமைகளை ஊர் ஊராகச் சென்று பரவச் செய்தனர்.
நவராத்திரி ஒன்பது நாட்களிலும் முறையே மூன்று நாட்களுக்கு பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என வழிபடுவது நன்மையை அளிக்கும். ஸ்ரீ ராமரும், ஸ்ரீ கிருஷ்ணரும் நவராத்திரி வழிபாடு செய்துதான் தங்களது கஷ்டங்களில் இருந்து விடுபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
இத்தகைய மகிமையைக் கொண்டது நவராத்திரி விழா. கலைமகளான சரஸ்வதியை வழிபடும் தினமான சரஸ்வதி பூஜையன்று மாலை கொண்டாடப்படும் விழாவே ஆயுத பூஜை.
சிறப்பாம்சம்

ஆயுத பூஜை அன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரம் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் சுத்தமாக கழுவி, துடைத்து பூஜைகள் செய்யவேண்டும்.

ஆயுத பூஜை அன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைக்கு பயன்படுத்தமாட்டோம் என் உறுதி எடுத்துக்கொள்வோமே!.

ஆயுத பூஜை எப்போது செய்வது?

9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் தசமி திதியில் ஆயுத பூஜை செய்ய வேண்டும். அந்த லக்னத்தில் அன்று எந்த சுபகாரியங்கள் செய்தாலும் அந்த வருடம் முழுவதும் சுபத்தைத் தரும் என்று சாஸ்திரம் சொல்கின்றது. எனவே இத்தகைய நேரங்களில்தான் நாம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய வேண்டும். சிலபேர் நேரம் இல்லை என்று இதற்கு முதல் நாளிலேயே செய்கின்றவர்களும் உண்டு. 

ஆனால், நம் இஷ்டத்திற்கு கால நேரம் பார்க்காது ஆயுத பூஜை செய்யக் கூடாது. ஆயுத பூஜை அன்றுதான் ஆயுதத்திற்குப் பூஜை. எனவே, அதற்கு உகந்த நேரத்தில்தான் நாம் பூஜை செய்ய வேண்டும்.

வாகன பூஜைக்கு ஏற்ற நேரம் 

விருச்சிக லக்னத்திற்கு அதிதேவதை செவ்வாய் பகவான். செவ்வாய் பகவான்தான் வாகனங்களுக்கு அதிதேவதை. ஆகவே, வாகனங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் விருச்சிக லக்னத்தில்தான் ஆயுத பூஜை செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கின்றது.





0 comments:

Post a Comment