ஜோதிட தகவல்: தத்து எடுத்தல்

Friday 3 October 2014
ஜோதிட தகவல்: தத்து எடுத்தல்




ஒருவருக்கு 60 வயதாகியும் புத்திரன் இல்லை என்றாலும் அல்லது ஒருவரது ஜாதகப்படி அவருக்கு அற்ப ஆயுள் அல்லது புத்திர பாக்கியம் இல்லையென்றும் தெரிய வந்தால் அவர் ஒரு பையனை தன்னுடைய மகனாக தத்து எடுத்துக்கொள்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் தீர்க ஆயுளும், நல்ல அறிவுடனும், நல்லதிர்ஷ்டமும், குழந்தை பாக்கியமும் உடையவனாய் இருத்தல் வேண்டும். மேலும் தத்தெடுக்கப்போகும் அந்த பையன் அவருடைய கோத்திரமாகவும் இருத்தல் வேண்டும்.

இந்த தத்து எடுக்கும் நிகழ்ச்சி அல்லது சடங்கு உத்திராயண காலத்தில் (அதாவது தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 6 மாதத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் நடக்க வேண்டும்).

அதுபோல இந்த தத்து எடுக்கும் சடங்கை அஸ்வினி, சுவாதி, புனர்பூசம், பூசம், ரோகிணி, அனுஷம், ஹஸ்தம், ரேவதி, திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் முற்பகலில் நடத்தப்பட வேண்டும்.

அந்த நேரத்தில் லக்கினத்திலும், 5ம் இடத்திலும் எந்த ஒரு பாவ கிரகமும் இருக்க கூடாது. அதுபோல பையனுக்கு அன்றைய தின நட்சத்திரமும், சந்திரனின் சஞ்சாரமும் சாதகமாக இருக்க வேண்டும்.

மேற்கூறிய முறைப்படி தத்து எடுக்காமல் ஏதோ ஒரு நாள், நட்சத்திரத்தில் இந்த சடங்கை செய்தால் தத்து எடுக்கப்பட்ட பையனால் வீட்டில் கலகமும், குழப்பமும் உண்டாகி நம்மதி குறையும் என சாஸ்திரம் கூறுகிறது.




0 comments:

Post a Comment