சந்திர கிரகணம்: 08.10.2014

Tuesday 7 October 2014
சந்திர கிரகணம்: 08.10.2014




செய்ய வேண்டியது:

சந்திர கிரகணம் ஆரம்பிப்பதற்கு முன்பு தயாரித்த உணவு மிச்சமிருந்தால் வெளியே கொட்டி விடலாம். ஊறுகாய், தயிர், மோர், பால்வகை உணவுகள் இருந்தால் அதன் மேல் தர்பைப்புல் போட வேண்டும். 

கிரகணம் விட்டபின்பு தலை குளித்து விட்டு, வீட்டை கழுவி பூஜை செய்ய வேண்டும். 

கிரகண காலத்தில் குரு உபதேசம் பெறுவது சிறந்த பலனைத் தரும். 

ஒரு தெய்வத்தைக் குறித்த மூலமந்திர ஜெபத்தை உற்சாடனம் செய்ய (மனதில் ஏற்றிக் கொள்ள) அது எதிர்காலத்தில் உயர்ந்த பலனை தரும். 

நீண்ட நாள் நோயுற்றவர்கள் கிரகண நேரத்தில் கடலில் குளித்து விட்டு தன்வந்த்ரி, மருதய ஜெய ஜெபம் செய்வதால் பூரண நலம் பெறலாம். 

கிரகண காலத்தில், ஆன்மீகவாதிகள் குருநாதர்கள், மந்திர தீட்சை பெற்றவர்கள் கிரகண தொடக்க காலத்தில் ஆரம்ப ஸ்தானமும், நடு காலத்தில் மத்திய ஸ்தானமும், விழும் காலத்தில் பூர்த்தி ஸ்தானமும் செய்ய வேண்டும் என்று கிரகண காலவிதி கூறுகிறது. 

சந்திர கிரகணம் கேதுவால் பிடிக்கப்படும் நிகழ்வாக இருப்பதால் கிரகணம் முடிந்து விநாயகர் சந்நிதிக்கு (அருகம்புல்) சென்று அல்லது ஆஞ்ச நேயர் சந்நிதிக்கு சென்று துளசி சாற்றி நெய் தீபம் ஏற்றி விநாயகரை அவரது துதியாலும், ஆஞ்சநேயரை அவரது துதியாலும் வணங்க வேண்டும்.  

செய்ய கூடாதவை:

மாதவிலக்கான பெண்கள் பிறர் கொண்டுவரும் நீரை பயன்படுத்தி குளித்தல் கூடாது. 

கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது. 

கிரகணத்திற்கு முன்பு 3 நாட்களும், பின்பு 3 நாட்களும் சுப காரியங்கள், புதிய காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது. 

கிரகணம் நிகழும் நேரத்தில் சாப்பிட கூடாது. 

படுத்து உறங்குதல் கூடாது. 

பெண்களுடன் சேர்தல் கூடாது. இதனால் மந்தமுடைய குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது

(தகவல் மாலைமலரில் இருந்து)..

0 comments:

Post a Comment