நட்சத்திர பாதம்

Tuesday, 2 September 2014
நட்சத்திர பாதம்




நவகிரகங்களும் 27 நட்சத்திரங்களின் மேல் ஒரு முறையான பாதையில் சுற்றி வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் 4 பாதங்கள் உள்ளன.

9 கோள்களும் மெல்ல மெல்ல ஒவ்வொரு பாதம் வீதமாக தான் நகரும். இதில் சந்திரன் அதிவேகமாக நகருவார். அதாவது 9 நட்சத்திர பாதங்களை 2 1/4 நாளில் கடப்பார்(1 ராசிக்கட்டத்திற்க்கு 9 பாதங்கள், அதாவது 2 நட்சத்திரம்(4+4 பதங்கள்) + 1 நட்சத்திர பாதம்= 9 பாதங்கள்).

சந்திரன் வேகமாக பாதத்தை கடக்கிறார் எனில் சனி பகவான் 9 பாதங்களை கடக்க 2 1/2 வருடங்கள் ஆகின்றன. இது போல மாதக்கோள்களும் ஒவ்வொரு பாதமாகத்தான் கடக்கின்றது.

1 நட்சத்திரத்திற்க்கு 4 பாதம் எனில், 27 நட்சத்திற்க்கும் மொத்தம் 108 பாதங்கள்(27*4=108). ஒரு கிரகம் ஒருமுறை 12 ராசிகட்டத்தையும் முழுமையாக சுற்றி வர வேண்டுமெனில் 108 பாதங்களையும் மெதுவாக கடக்க வேண்டும்.

அப்படி கிரகங்கள் எந்த நட்சத்திரத்தின் மீது சென்றுகொண்டிருக்கிறதோ அதையே "கிரக சாரம்" என்பர்.

சந்தேகங்கள் எதுவாயினும் கமென்ட் செய்யவும்.


குருவே சரணம்..


ஜோதிஷம்

ஜோதிஷம்(எ)ஜோதிடம்



மிகப் பழமையான வேதங்கள் என்று போற்றப்படும் ரிக்,யஜூர், சாம,அதர்வண வேதம் ஆகிய நான்கும் இப்பிறவிக்கு வழிகாட்டும் நான்மறை நூல்களாகும்.

உபநிஷம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய மூன்றும் மறுமைக்கு வழிகாட்டும் நூல்கள் என போற்றப்படுகிறது.

இவற்றுக்கு அப்பாற்ப்பட்டதாக உள்ளவை சிக்‌ஷா, வியாகரணம், நிருத்தம், சந்தஸ், கல்பம், ஜோதிஷம் ஆகிய ஆறு சாஸ்திரங்கள் ஆகும்.

இதற்க்கு அடுத்து வழிவழியே கடைபிடிக்கப்பட்ட கலைகள் 64 ங்கு ஆகும்.

1. எழுத்தியல்புக் கலை

2. லிகிதக் கலை

3. கணிதக் கலை

4. வேதம்

5. புராண இதிகாசம்

6. வியாகரணம்

7. ஜோதிட சாஸ்திரம்

8. தரும சாஸ்திரம்

9. நீதி சாஸ்திரம்

10. யோக சாஸ்திரம்

11. மந்திர சாஸ்திரம்

12. சகுன சாஸ்திரம்

13. சிற்ப சாஸ்திரம்

14. வைத்திர சாஸ்திரம்

15. உருவ சாஸ்திரம்

16. சப்தப் பிரம்மம்

17. காவியம்

18. அலங்காரம்

19. மதுரபாஷணம்

20. நாடகம்

21. நிருத்தம்

22. வீணை

23. வேணுகானம்

24. மிருதங்கம்

25. தாளம்

26. அஸ்திரப் பயிற்சி

27. கனக பரீட்சை

28. ரதபரீட்சை

29. கஜ பரீட்சை

30. அஸ்வ பரீட்சை

31. ரத்ன பரீட்சை

32. பூமி பரீட்சை

33. சங்கிராம இலக்கணம்

34. மல்யுத்தம்

35. ஆகர்ஷணம்

36. உச்சாடனம்

37. வித்வேஷணம்

38. மதன சாஸ்திரம்

39. மோகனம்

40. வசீகரணம்

41. இரசவாதம்

42. காந்தருவ வாதம்

43. பைபீல வாதம்

44. கவுத்துவாதம்

45. தாதுவாதம்

46. காருடம்

47. நஷ்டப்பிரசன்னம்

48. முட்டி சாஸ்திரம்

49. ஆகாயப் பிரவேசம்

50. ஆகாய கமனம்

51. பரகாயப் பிரவேசம்

52. அதிருசியம்

53. இந்திரஜாலம்

54. மகேந்திர ஜாலம்

55. அக்கினிஸ்தம்பனம்

56. ஜல ஸ்தம்பனம்

57. வாயு ஸ்தம்பனம்

58. திருஷ்டி ஸ்தம்பனம்

59. வாக்கு ஸ்தம்பனம்

60. சுக்கில ஸ்தம்பனம்

61. கன்ன ஸ்தம்பனம்

62. கட்க ஸ்தம்பனம்

63. அவஸ்தை பிரயோகம்

64. கீதம்

இந்த 64 கலைகளில் ஜோதிடம் 7 வது கலையாக இருப்பதைக் கொண்டே அதன் மகத்துவத்தை அறியலாம்.

இதன் மகிமையை அறிந்துதான், அக்காலத்தில் அரசர்பெருமக்கள் தங்களது அரசவையில் ஆஸ்தான ஜோதிடர்களை நியமித்து, செம்மையாக ஆட்சி புரிந்தும், போர் துவங்கும் முன் தகுந்த நேரம் பார்த்து போர் புரிந்தும் பல தேசங்களை தம் கைவசம் கொண்டனர்.

பிற்காலத்தில் அரசு மாற மாற ஜோதிடத்தின் மகிமையும், ஜோதிடரின் மகிமையும் உணராது அவர்களை உதாசினபடுத்தி அதன் விளைவாக அரசு மாற்றம்,இழப்பு போன்றவற்றை அனுபவித்தனர்.

இந்த ஜோதிடக் கலையானது 18 சித்தர்களால்(அத்திரி, ஆங்கிரஸர், வசிஷ்டர்,நாரதர், காசியபர், அகஸ்தியர், போகர், புலிப்பாணி, வியாசர், பராசரர், ரோமர், கற்கர், புகர், சவுனர், கெளசிகர், ஜனகர், நந்தி, ஜெயமுனி ) வழிவழியே வளர்க்கப்பட்டு வந்தது.

இவர்கள் எழுதிய ஜோதிட மூல நூலகள் யாவும் காலம் மாற மாற நசிந்து போய் விட்டன.

இப்போது பெரும்பாலோரால் ஏற்று கடைபிடிக்கப்பட்டு வரும் மூல நூலகள் மூன்று , 1. பிருகுத் ஜாதகம் (வராகி மிகிரர்), 2. சாராவளி (கல்யாண ராமன்), 3. சாதக அலங்காரம் (கீரனூர் நடராஜன்).

முதன் முதலில் பஞ்ஞாஙகம் எழுதி வெளியிட்டவர்கள் ஆரியபட்டரும்,வராகிமிகிரரும் ஆவர்.

இவ்வளவு மேன்மை பொருந்திய ஜோதிடக்கலையை போற்றுவோம்.


குருவே சரணம்.. 

தெய்வ சித்தம்

தெய்வ சித்தம்



ஜோதிடம் கற்றுத்தெளியவேண்டும் என நினைக்கு ஒவ்வொருவருக்கும் தெய்வ பக்தி என்பது நிச்சயம் இருக்க வேண்டும். இறைவன் அருள் இல்லாமல் நீங்கள் கூறும் பலன் பலிக்காமல் போவதற்க்கு வாய்ப்புகள் உண்டு.

கிரகம் நமக்கு தரும் பாதகங்களை சதகமாக மாற்றும் தன்மை தெய்வசக்திக்கு உண்டு.இறைவனிடம் பக்தியும்,,அவர் அருளும் பரிபூரணமாக பெறவர் ஜோதிடம் படித்து பலன் கூறவேண்டும் என்றில்லை. அவர் வாக்கு நிச்சயம் பலிதமாகும்.

தினமும் இறைவனின் அருளை பெற மட்டும் மறக்காதீர். அவருடைய ஆசி நம்மை எப்பொழுதும் காப்பாற்றும். முதலில் குழதெய்வத்தையும், தங்களது இஷ்டதெய்வத்தையும் என்றும் மறக்காமல் பூஜை செய்து வந்தாலே சகல செல்வங்களும், அவர்களது ஆசியும், நீங்கள் விரும்பும் ஜோதிடமும் கைகூடும்.

இல்லையேல் வாக்கு பலிதம் என்பது சாத்தியம் அற்றதே.


குருவே சரணம்..

முன் எச்சரிக்கை!!!

Monday, 1 September 2014
முன் எச்சரிக்கை



ஜோதிடம் தெரிந்துகொள்வதற்க்கு முன்,இது அவசியம்.

இந்த எச்சரிக்கை யாருக்கு?. நம் அனைவருக்கும் தான். ஜாதகம் தான் அனைத்திற்க்கும் பிராதனம் என உங்களுக்கு தெரியும். ஜாதகப்படி அதாவது நவகிரகங்கள் படி நாம் எல்ல கஷ்ட நஷ்டங்களையும் அனுபவிக்கிறோம். அந்த கஷ்டத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவே ஜோதிடம் நமக்கு பெரும்பாலும் உதவுகின்றது.

எப்பொழுதும் நாம் நன்றாக இருக்கும்பொழுது ஜோதிடம் பார்க்க செல்வதில்லை. பிரட்சனைகள் ,கஷ்டம் என ஒவ்வொன்றாக தலைதூக்க ஆரம்பித்தவுடனே தான் ,நேரம் நல்லா இருக்கா இல்லையா என பார்க்க ஜோதிடரிடம் செல்கிறோம்.

அப்படி நேரம் சரியில்லை எனில் சிறு சிறு பரிகாரம் மூலம் நாம் அதை சரி செய்துகொள்ளமுடியும். இது எதை உணர்த்துகிறது எனில் நமக்கு நேரம் சரியில்லை எனில் தகுந்த பரிகாரம் மூலம் அதை தடுத்து நிறுத்த முடியும். அதற்க்கு உதவுவது நம்முடைய ஜாதகம்.

எப்படி கஷ்ட காலத்தில் பரிகாரம் மூலம் நாம் நம்மை காத்துக்கொள்கிறோமோ, நமக்கு பாதகமாக அமைவதும் நமது ஜாதகமே. அது எப்படியெனில்,நமக்கு தெரிந்தவ்ர்,ஜோதிடர் என்று நம்பி, நமது ஜாதகத்தை அவரிடம் கொடுக்கிரோம்.

அவர் நல்லவர் எனில் எந்த பிரட்சனையும் இல்லை. அதுவே அவர் நம் முன்னே சிரித்து பேசுபவராகவும்,பின் நமக்கு பாதகம் விளைவிப்பவராகவும் இருந்தால்?. நம் ஜாதக குறிப்பு அவரிடம் உள்ளது அதை வைத்து அவரால் என்ன செய்யமுடியும் என்று நினைக்காதீர்கள்.

உங்களுக்கு கெட்ட நேரம் வரும்போது பரிகாரம் எப்படி உங்களை காக்கிறதோ,அதுபோல உங்கள் நல்ல கெட்ட நேரத்தை முறையே அறிந்து உங்கள் குலதெய்வத்தை கட்டு கட்டி,உங்களை அகல பாதாலத்திற்க்கும் தள்ள முடியும்.

தெரிந்தவர்கள் என்று நம்பி தங்கள் குலதெய்வத்தையோ,ஜாதக விஷயங்களையோ சொல்லி தெரிந்தே மாட்டிக்கொள்ளார்கள்.இதில் பாதிக்கப்பட்ட அனுபவம் என்க்கும் உண்டு.


குருவே சரணம்..

இனி வரும் பதிவுகள்




இனி என்னுடைய பதிவுகள் அனைத்தும் http://jothidamkarppom.blogspot.in ல் பதிவிடப்பட்டு நேரடியாக முகநூலுக்கு வரும். அங்கு தனியாக இங்கு தனியாக பதிவிட நேரமின்மை காரனமாக இவ்வாறு செய்துள்ளேன்.

முந்தய பதிவிட்ட பதிவுகளும், இனி வரும் தகவல்கள் மற்றும் பாடங்கள் அனைத்தும் மிக முக்கியமாகவும் சூட்சமமாகவும் இருக்கும். ஆகையால் தொடர்ந்து படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சிறு சிறு விஷயத்தையும் நுட்பமாக வழங்கப்படும்.முடிந்தவரை குறிப்புகளை குறித்துக்கொள்ளுங்கள்.

காலம் நீடித்தாலும் ஜோதிட ஆர்வமுள்ளோர்க்கு மிகவும் பயன்படும் தகவல்கள் தெரிவிக்கப்படும்.விருப்பம் உள்ளோர் படித்து பயன்பெறுக.


குருவே சரணம்..

பலன் தரும் காலம்

கிரகங்கள் பலன் தரும் காலம்



ஜோதிடம் தனி மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பாக உள்ளது. அதாவது அவன் வாழ்க்கை தீபம் போல ஒளிருமா இல்லை இருள் சூழ்ந்த கரு மேகம் போல திகழுமா என அனைத்து விஷயங்களையும் ஜோதிடம் நமக்கு வழங்குகிறது.

இவை அனைத்தும் நவகிரகங்களின் ஆதிக்கத்தாலே நமக்கு நடக்கிறது. நமக்கு நல்லது நடக்குமாயின் நல்ல தசா புத்தி வரவேண்டும், சுப கிரகங்கள் நம்மை ஆட்கொள்ளவேண்டும்,அவர்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

கோசாரமாயினும்,தசா புத்தி ஆயினும் அவர்கள் பலன் தர சில காலம் என்பது உண்டு. நல்ல நிலையில் கிரகங்கள் வந்ததும் அவர்களது பலன்களை எடுத்து நடத்தமாட்டார்கள்.

எனக்கு குரு லாபஸ்தானத்தில் இருக்கிறார், நல்ல நிலையில் இருக்கிறார் வாரிவழங்கப்போகிறார் என நினைத்தால் அது நடக்காது. ஏன் எனில் அவர்கள் பலனை வழங்குவதற்க்கும் காலம் வரவேண்டும்.அப்படி நடந்தால் தான் நமக்கு வசந்தகாலம். அப்படி நல்லது நடப்பதற்க்கும் பல சூட்சமங்கள் உண்டு.

நவகிரகங்களில் சூரியனும்,செவ்வாயும் தனது தசா ஆரம்பகாலத்தில் பலன் தருவார்கள். சந்திரனும்,புதனும் தசா ஆரம்பம் முதல் கடைசி வரை பலன் தர வல்லவர்கள். குருவும், சுக்கிரனும் தனது தசா மத்திம காலத்தில் பலன் தருவார்கள். சனி,ராகு, கேது ஆகிய மூவறும் தனது தசா கடைசி காலத்தில் பலன் தருவார்கள்.

இப்படியே நவகிரகங்களும் தங்களுக்கு உரிய காலங்களில் பலனை தருவார்கள்.


குருவே சரணம்..

கிரக உறவு

கிரகங்களின் உறவு முறைகள்




நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரை நவகிரகங்கள் ஆதிக்கத்தினாலேயே நாம் வாழ்கிறோம். அவர்கள் நமக்கு நல்லதும்,கெட்டதும் நம் முன்வினை பாவபுண்ணியத்தைபொறுத்தே தருகின்றனர்.

நமது கூடப்பிறந்தவர்களையும், நம்மை பெற்றொடுத்தோரையும் எப்படி முறைகொண்டு உடன்பிறப்புகள் மற்றும் தாய்,தந்தை என்று அழைக்கிறோமோ, அதுபோல நவகிரகங்களும் உறவுமுறைகொண்டே விளங்குகின்றன.

தேவகுரு என போற்றப்படும் குருபகவானும்,அசுரகுரு என போற்றப்படும் சுக்கிர பகவானும், தினமும் தேய்ந்தும், வளர்ந்தும் வருகிற சந்திர பகவானும் சூரியனுக்கு சிறுதந்தையராம்.

வித்தைகாரகன் என போற்றப்படும் புத பகவான் சூரியனுக்கு சகோர முறை ஆவார்.

கொடியோர் என மக்கள் கண்டு பயப்படும் சனி,ராகு,கேது ஆகிய மூவரும் சூரியனின் புதல்வர்களாகும்.சகோதர காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் சூரியனுக்கு கொள்ளுப்பேரனாவார்.

இவ்வாறு நவகிரகங்களும் உறவுமுறை கொண்டு விளங்குகின்றன.நாம் எப்படி சிலரிடம் மனஸ்தாபம் கொண்டு அவர்களுக்கு பகையாக இருக்கிறோமோ அதுபோலவே நவகிரகங்களும் சில கிரகத்திற்க்கு சில கிரகம் பகை கொண்டு விளங்குகின்றன.

என்னதான் அவர்கள் பகை கொண்டாலும், உறவு முறை கொண்டு விளங்கினாலும் இறைவன் அவர்களுக்கு இட்ட கட்டளையான காரகத்தை முறையே செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.


குருவே சரணம்..