புதையல் யாருக்கு?

Friday, 21 November 2014
புதையல் யாருக்கு?


பணம், பணம், பணம் .எங்கு பார்த்தாலும் பணம். எதற்கெடுத்தாலும் பணம். மனிதன் தனது உண்மையான தேடலை விடுத்து எப்பொழுதும் நிலையில்லாது இருக்கும் பணத்தின் மீதே ஆர்வம் போகின்றது.

இதில் குறைகூற ஒன்றும் இல்லை, ஏனெனில் பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். பணம் இல்லாவிட்டால் ஏன் சமூகத்திற்க்கு போக வேண்டும்! வீட்டில் கூட மரியாதை இருக்காது.

இப்படிப்பட்ட இன்றியமையாத பணத்தை அடைய அனைவரும் உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். பெற்றோரை விடுத்து, கட்டிய மனைவியை பிரிந்து, பெற்ற பிள்ளையின் முகத்தை வருடக்கணக்கில் காணாமல் பணத்தின் பின்னே ஓடி ஓடி சம்பாரிக்கின்றனர்.

பலபேர் இரவும் பகலுமாக உளைத்தும் போதிய வருமானம் இல்லாமல் இருக்கின்றனர். சிலருக்கோ ஒன்றும் செய்யாமலே பணம் தானாக தேடி வரும். உதாரணமாக புதையலோ அல்லது வேறு மறைமுக வழியிலோ வந்து சேரும். இப்படி நோகாமல் பணம் கிடைப்பதற்க்கும் ஜாதகத்தில்  அமைப்பு வேண்டும்.

அதாவது ஜனன ஜாதகத்தில் ராகு லக்னத்திற்க்கு 6 ம் இடத்திலும், கேது 12 ம் இடத்திலும், தேவகுரு கேந்திரத்தில் நின்றால் அந்த ஜாதகனுக்கு புதையல் கிட்டும். அதாவது எதிர்பாராமல் பணம் அல்லது பொன்னோ நிச்சயம் வந்து சேரும்.

காலம் முழுவதும் கஷ்டபடுவோர் இருக்கையில் ,சிலருக்கு இப்படியும் அதிர்ஷ்டம் அடிக்கும். எல்லாம் அவரவர்கள் வாங்கிவந்த வரம்.

சில பொன்மொழிகள்:

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.
-ஸ்மித்.

பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்
- ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்.
-வீப்பர்.


மிகுந்த தனம் கொண்ட ஜாதகன்

Friday, 7 November 2014
மிகுந்த தனம் கொண்ட ஜாதகன்


கூறினேன் கலைமதியும் ஒன்றில் நிற்க

குருவெள்ளி தேர்ப்பாகன் ஆரேழெட்டில்

மாரினேன் மற்றோர்கள் மூன்றுபத்து

மைந்தனே லாபத்தி லமர நன்று

சீரினேன் செம்பொன்னும் கோடியுண்டு

சிவசிவா சீர்பெருகும் செல்வமுள்ளோன்

தேரினேன் காலாள்கள் மெத்தவுண்டு

திடமாகப் புலிப்பாணி தெரிவித்தேனே.

இன்னுமொன்று இலக்கினத்தில் பூர்ண கலையுள்ள சந்திரன் நிற்க, குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் முறையே 6,7,8, ஆகிய இடங்களில் நிற்க மற்றையோர் 3,10,11 ஆகிய இடங்களில் அமர்ந்திருப்பின் அச்சாதகன் நன்மையான பலன்களையே அடைகிறான். சிறந்த செம்பொன் கோடி கோடியாய் அவனுக்கு வாய்க்கும். சிவபரம் பொருளின் பேரருட் கருணையால் செல்வச்சீர் பெருகிப் காணும். மிகத் தனவந்தனான அவன் தேர்ப்படையுடன் காலாட்படையும் மெத்தவுடையன் என்று போகமா முனிவரின் அருளாணை பெற்ற புலிப்பாணி கூறினேன்.


நாடாளும் மன்னன்

நாடாளும் மன்னன்


பாடினேன் நின்னமொன்று பகரக்கேளு

படவரவு பரமகுரு சேர்ந்துநிற்க

கூடினேன் குளிர்ந்தமதி அருகில் நிற்கக்

கொற்றவனே குவலயமும் ஆளும்வல்லன்

தேடினேன் தேர்வீரர் கோடாகோடி

திடமுள்ள துரகங்கள் ரதங்கள்மெத்த

நாடினேன் போகருட கடாட்சத்தாலே

நாடெல்லா மாளுமன்னன் நயந்துபாரே.

மேலும் ஒன்றையும் நான் பாடுகிறேன். கேட்பாயாக! பாம்பும் குருவும் குளிர்ச்சி மிக்க சந்திரன் அருகில் நிற்க ஒரு மனையில் இருப்பின் அச்சாதகன் இக்குவலயம் ஆளும் மன்னனே ஆவான். கோடானு கோடி தேர் வீரர்களுடன் நல்ல ஆஜானுபாகுவான குதிரைகளையும் (குதிரைப் படையையும்) மற்றும் ரதங்களையும் உடைய வெற்றி வீரன் என்று போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
 

ஐசுவரியம் நிறைந்த ஜாதகன்

ஐசுவரியம் நிறைந்த ஜாதகன்


பாரப்பா மேடமுதல் கடகம்மற்றும்

பகருகின்ற கிரகங்கள் ளிருவராக

ஆரப்பா அகங்கள் தனி லமர்ந்திருக்க

அப்பனே அயிஸ்வரியம் மெத்தவுண்டு

சீரப்பா செம்பொன்னும் ரதங்கள் மெத்த

சிரந்ததொரு படைவீரர் கரிமாவுண்டு

ஆரப்பா துலைபூமிக் கரசனாகி

தொல்புவியில் வாழ்ந்திருப்பன் சூழ்ந்துபாரே.

இன்னுமொன்றும் கேள்! மேஷம் முதல் கடகம் வரை ஒவ்வொரு மனைவியரும் இவ்விருவராக (இரண்டிரண்டு பேராக) அமர்ந்திருக்க, அச்சாதகனுக்கு ஐசுவரியம் மிகவும் உண்டாம். சிறப்பு மிக்க பொன்னாபரணச் சேர்க்கையும், ரதங்களும் சிறந்த படைவீரர்களும் யானைப்படையும் கொண்டு நீதி வழுவாது தராசுபோல் இப்புவியில் புகழ்பரப்பி மன்னனாக வாழ்வான்.
 

பகைவருக்கு எமன்

பகைவருக்கு எமன்


அரைந்திட்டேன் நாலுபேர் கூடிநிற்க

அப்பனே அதற்குமற் றோர்கள் நிற்க

பரைந்திட்டேன் பாருலக மாளும்வல்லவன்

பகருகின்ற சேனைரதம் கணக்கேயில்லை

சிரந்திட்டேன் சிற்றரசர் மெத்தவுண்டு

செகத்திலே பேருள்ள ராசனாகி

குரைந்திட்டேன் கொடுமன்னர் எதிர்த்தாரானால்

கூற்றுவனைப் போலிருப்பன் ஆறினேனே.

வேறொன்றையும் கூறுகிறேன் கேட்பாயாக! நாலு கிரகங்கள் கூடி நிற்க அவற்றுடன் மற்ற கிரகங்கள் உறவாய் நிற்க, அச்சாதகன் இந்நிலவுலகத்தை ஆளும் மன்னவன் என்றும் அவனது சேனை பலத்திற்கு அளவில்லை என்பதும், சிறந்த கப்பம் செலுத்தும் சிற்றரசர்கள் அவனுக்கு வெகுபேர் உண்டென்றும் என்றென்றும் நற்பேறும் புகழும் கொண்டு வாழ்வான் என்றும் இவனுக்கு எதிரிகள் இருப்பாரானால் அழிந்தொழிவர் என்றும்இவன் பகைவருக்கு எமன் போன்றவன் என்றும் போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி புகன்றிட்டேன்.
 

ருது: கரண பலன்

Wednesday, 5 November 2014
ருது: கரண பலன்


பவம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் சுகமுண்டாகியிருப்பாள்.

பாலவம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் செளபாக்கியவதியாயிருப்பாள்.

கெளலவம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் ரூபவதியாயிருப்பாள்.

தைதுளை கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் பக்‌ஷ்முண்டாகியிருப்பாள்.

கரசை கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் விதவையாவாள். இந்த கரணத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

வணிசி கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் கொள்ளக் கொடுக்க வல்லவள்.

பத்திரை கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் நன்மையில்லாதவள்.

சகுனி கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் நடவாதநடக்கை நடப்பாள். இந்த கரணத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

சதுஷ்பாதம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் சந்தோஷமில்லாதவள். இந்த கரணத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

சாகவம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் நன்மையில்லாதவள்.

கிம்ஸ்துக்கினம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் தரித்திரமாயிருப்பாள்.

உலகாளும் யோகம்

உலகாளும் யோகம்


ஆரப்பா அஞ்சுபே ரொன்றுகூடி

அப்பனே மற்றவர்கள் ஒற்ற்ராமல்

கூறப்பா குன்றுகளில் தனித்திருக்க

கொற்றவனே குவலயங்க ளெல்லாமாள்வன்

பாரப்பா படைவீரர் ஜெனங்கள் மெத்த

பறக்குமடா கொடித்திரையும் கடலுக்கப்பால்

சீரப்பா செம்பொன்னும் விளையும் பூமி

சிக்குமடா புலிப்பாணி செப்பினேனே.

உலகாளும் யோகம் என்பது தற்காலத்தில் சாத்தியப்படாத ஒன்று. இருப்பினும் நாடு என்றும் எடுத்துக்கொள்ளலாம். இத்தகைய யோகம் ஒருவருக்கு இருக்கவேண்டுமானால், ஜனன ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் ஒன்று கூடி ஒரே ராசியில் இருக்கவேண்டும். மற்ற நான்கு கிரகங்கள் கேந்திரஸ்தானத்தில் தனித்தனியே இருக்கவேண்டும். அதாவது 1,4,7,10 ல் மற்ற நான்கு கிரகங்கள் இருக்க வேண்டும். இப்படி இருக்க பிறந்த ஜாதகன் உலகாளும், நாடாளும் யோகம் பெறுவான். இப்படி அமைவதும் ஒரு சிலருக்கு தான். இப்படி அமையப்பெற்ற ஜாதகனுக்கு ஆளும் யோகம் மட்டும் இல்லாமல் சேவை செய்ய நிறைந்த வேலையாட்களும், அன்பு செலுத்த மகளிரும், பொன், வயல்நிலங்களும் கண்டிப்பாக உண்டு. அவனது புகழானது கடல் கடந்து நிலைத்து நிற்க்கும்.