உலகாளும் யோகம்

Wednesday 5 November 2014
உலகாளும் யோகம்


ஆரப்பா அஞ்சுபே ரொன்றுகூடி

அப்பனே மற்றவர்கள் ஒற்ற்ராமல்

கூறப்பா குன்றுகளில் தனித்திருக்க

கொற்றவனே குவலயங்க ளெல்லாமாள்வன்

பாரப்பா படைவீரர் ஜெனங்கள் மெத்த

பறக்குமடா கொடித்திரையும் கடலுக்கப்பால்

சீரப்பா செம்பொன்னும் விளையும் பூமி

சிக்குமடா புலிப்பாணி செப்பினேனே.

உலகாளும் யோகம் என்பது தற்காலத்தில் சாத்தியப்படாத ஒன்று. இருப்பினும் நாடு என்றும் எடுத்துக்கொள்ளலாம். இத்தகைய யோகம் ஒருவருக்கு இருக்கவேண்டுமானால், ஜனன ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் ஒன்று கூடி ஒரே ராசியில் இருக்கவேண்டும். மற்ற நான்கு கிரகங்கள் கேந்திரஸ்தானத்தில் தனித்தனியே இருக்கவேண்டும். அதாவது 1,4,7,10 ல் மற்ற நான்கு கிரகங்கள் இருக்க வேண்டும். இப்படி இருக்க பிறந்த ஜாதகன் உலகாளும், நாடாளும் யோகம் பெறுவான். இப்படி அமைவதும் ஒரு சிலருக்கு தான். இப்படி அமையப்பெற்ற ஜாதகனுக்கு ஆளும் யோகம் மட்டும் இல்லாமல் சேவை செய்ய நிறைந்த வேலையாட்களும், அன்பு செலுத்த மகளிரும், பொன், வயல்நிலங்களும் கண்டிப்பாக உண்டு. அவனது புகழானது கடல் கடந்து நிலைத்து நிற்க்கும். 

0 comments:

Post a Comment