ருது: மாதபலன்

Thursday, 30 October 2014
ருது: மாதபலன்


நமது புராதான ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லாத விஷயங்களே இல்லை,அதுபோல இல்லாத விஷயங்களே இல்லை. நமது அன்றாட நிகழ்வுகளை கூட முறைப்படி எப்படி செய்யவேண்டும் என சொல்லி சென்றுள்ளனர். அதில் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் பூப்படைதல்(ருது) பற்றியும், பூப்படைதல் நிகழ்ந்த நேரம் கொண்டு அதற்கான பலாபலன்களையும் கூறியிருக்கின்றனர்.

சித்திரை மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் அது புருசனுக்கு ஆகாது. இம்மாதத்தில் ருது ஆன பெண் பரிகாரம் செய்துகொள்வது மிக அவசியம்.

வைகாசி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் சுகமாயிருப்பள். இம்மாதத்தில் ருது ஆன பெண்ணிற்க்கு அனைத்துவித நன்மைகளும் கிட்டும்.

ஆனி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் புத்திர சம்பத்தாயிருப்பாள். அதாவது புத்திரவிருத்தி பெற்று சுகமாக வாழ்வாள்.

ஆடி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் அவள் பல புருஷரையிச்சிப்பாள். அதாவது பல ஆடவரை கூடுவாள். இவர்களும் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

ஆவணி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் நல்ல குழந்தைகளைப் பெறுவாள்.

புரட்டாசி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் விருத்திபுத்தியுடையவள். அதாவது புத்திக்கூர்மை , கீர்த்தி உடையவள்.

ஐப்பசி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் புத்திரருண்டாகி விதவையாவாள். அதாவது குழந்தைபேறுக்கு பின் கணவனை இழக்க நேரிடும். இவர்களும் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

கார்த்திகை மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் பலரையும் தூஷிப்பாள். இவர்களும் பரிகாரம் செய்வது அவசியம்.

மார்கழி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் நல்ல குழந்தைகளை பெறுவாள்.

தை மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் புண்ணியஞ் செய்பவளாயிருப்பாள்.

மாசி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் திரவியமுண்டாயிருப்பாள். அதாவது பொன்,பொருள் என அனைத்து சுகங்களையும் அனுபவிப்பாள்.

பங்குனி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் வெகு குழந்தைகளை பெறுவாள். அதாவது அதிக குழந்தைகள் உண்டாகும் பாக்கியம் கிட்டும்.









பரதேசம் (நாடு விட்டு நாடு செல்லுதல்)

பரதேசம் (நாடு விட்டு நாடு செல்லுதல்)


பாரப்பா ஈராறோன் இருநான்கோனும்

பகருகின்ற செவ்வாயும் மூவர்சேர்ந்து

கூறப்பா யெவ்விடத்தில் கூடிட்டாலும்

கொற்றவனே பரதேசம் போவான் காளை

சீரேனீ சுந்திரனும் கண்ணுற்றாலும்

சிலகாலந் தங்கிருந்து செம்பொன்தேடி

ஆரப்பா அவன் பதியில் வந்துவாழ்வன்

அப்பனே புலிப்பாணி அரைந்திட்டேனே

இன்னுமொரு விஷயத்தையும் சொல்லுகிறேன் நன்கு விளக்கமாக இதனையும் நீ கேட்பாயாக! 12க்குடையவனும் எட்டுக்குடையோனும் சேர்ந்து செவ்வாயுடன் மூவரும் சேர்ந்து எந்த இடத்தில் கூடிநின்றாலும் அவன் பரதேசம் செல்வான். இவர்களைச் சந்திரன் கண்ணுற்றாலும் சில காலம் அங்கே தங்கியிருந்து வெகுதனம் தேடி மீண்டும் அவனது சுயதேசத்தில் வந்து வாழ்வான் என போகமா முனிவரது பேரருட் கரணையால் புலிப்பாணி கூறினேன்.
 

ஊர் ஊராக சுற்றுபவர்

ஊர் ஊராக சுற்றுபவர் 


பாரப்பா பரமகுரு சனியும் பாம்பும்

பலமாக சரஉபய மமர்ந்து நிற்க

சீரப்பா சென்மனுமே ஊரைவிட்டு

சிவசிவா சிலகாலந் தேசஞ்செல்வன்

கூறப்பாகுடி நாதன் வலுத்திருக்க

கொற்றவனே குமரனுந்தான் குடியில்வந்து

வீரப்பா வெகுகாலம் வாசஞ்செய்வன்

விளம்பினேன் புலிப்பாணி விளம்பக்கேளே

போகமா முனிவரருள் பெற்ற புலிப்பாணி கூறும் இக்கருத்தையும் நன்கு ஓர்ந்து கவனிப்பாயாக! பிரசித்தமான பரம சுகமளிக்கும் குருபகவானும் சனியும் பாம்பும் பலமுள்ளவராக சரம், உபயம் அமர்ந்து நிற்க அச்சென்மன் சிவ பரம்பொருளின் பேரருளால் தன் இருப்பிடத்தை விட்டு தேசாந்தரம் செல்வான். நீ மிகவும் ஆராந்து கூறுவாயாக. இலக்னாதிபதி வலுத்திருந்தால் முருகப்பெருமானின் அருளால் அவன் அவனது குடியில் வந்து வெகுகாலம் வாசம் செய்வான் என்றும் உணர்த்துவாயாக.
 



ருது: பூப்படைதல்

ருது: பூப்படைதல்


தமிழ்நாட்டில் ஒரு பெண் பூப்படைந்திருக்கிறாள் என்பதை சில பெண்களைக் கொண்டு உறுதிப்படுத்துகின்றனர். இந்த உறுதிப்படுத்தும் நிகழ்வை பூப்படைந்த பெண்ணின் தாயைத் தவிர பிறரே செய்கின்றனர். இந்து சமயத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் வரை வீட்டின் ஒதுக்குப்புறமாக தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறாள். 
இந்த தனிமைக் காலத்தில் பூப்படைந்த பெண்ணிற்கு உண்ண தனித் தட்டு, போன்றவையும், படுக்கத் தனிப்படுக்கையும் அளிக்கப்படுகின்றன. (தற்போது இந்நிலை சிறிது மாற்றமடைந்துள்ளது.).பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் புரோகிதர்களைக் கொண்டு புனிதச் சடங்கும் அதைத் தொடர்ந்து அவரவர் சாதிக் கட்டுப்பாடுகளுக்கேற்ப குடும்பச் சடங்கும் நடத்தப்படுகின்றன. இந்தச் சடங்குகள் தமிழ்நாட்டிலுள்ள பகுதி மற்றும் சாதிகளுக்கு ஏற்ப சிறிது மாறுபடுகின்றன. இவ்விழாவை பூப்புனித நீராட்டு விழா என்கின்றனர்.

புனிதச் சடங்கு


பெண்கள் பூப்படையும் நிகழ்வைத் தீட்டாகக் கருதி அவளைப் புனிதப்படுத்துவதற்காக புரோகிதர்களைக் கொண்டு ஒரு புனிதச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தப் புனிதச் சடங்கில் புரோகிதர்கள் செய்யும் சடங்குடன் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் விருப்பத்தின்படி கூடுதல் சடங்குகளைச் செய்வதுண்டு.
பூப்படைந்த பெண்ணை ஒரு இடத்தில் அமரச் செய்து அந்தப் பெண்ணின் முன்னால் ஒரு வாழை இலை போட்டு, அதில் நெல் போட்டு அதன் மேல் மற்றொரு வாழை இலை போட்டு அதில் அரிசி போட்டு அதையும் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மேல் மூன்று செம்புகளில்(கும்பம்) தண்ணீர் நிரப்பி அதில் மாஇலை, பூக்கள் போட்டு வைக்கப்படுகிறது. மஞ்சளைக் கொண்டு உருட்டி பிள்ளையார் உருவமாக வைத்து புரோகிதர் வழிபாடுகளைத் தொடக்குகிறார். அதன் பிறகு புரோகிதரால் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு யாகம் வளர்க்கப்படுகிறது. பின்னர் பூப்படைந்த பெண் அங்கிருக்கும் பெரியவர்கள் அனைவரிடமும் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்கிறார்.
இந்த யாகத்தின் முடிவில் தரையில் அரிசி மாவுப் பொடியால் மூன்று கோடுகளுடனான சதுர வடிவம் வரையப்படுகிறது. சதுரத்தின் நான்கு மூலைப்பகுதியிலும் நான்கு விளக்குகள் வைக்கப்பட்டு அனைத்துத் திரிகளிலும் தீபமேற்றப்படுகிறது. நான்கு மூலைகளிலும் இவற்றிற்கிடைப்பட்ட மத்தியப் பகுதியிலும் வெற்றிலை, பாக்கு மற்றும் வாழைப்பழம் வைக்கப்பட்டு நடுவில் பூப்படைந்த பெண் உட்கார வைக்கப்படுகிறாள். அதன் பின்பு நான்கு விளக்குகளும் நூலால் இணைக்கப்படுகின்றன. இப்போது புரோகிதர் மீண்டும் வேத மந்திரங்களை உச்சரிக்கிறார். பிறகு தாய்மாமன் மனைவியைக் கொண்டு ஒரு தீபத்தின் மூலம் நான்கு விளக்குகளையும் இணைத்த நூல் நான்கு மத்தியப் பகுதியில் துண்டிக்கப்படுகிறது.
இதன் பிறகு புரோகிதர் கும்பத்திலிருக்கும் புனித நீர் கொண்டு முதலில் பூப்படைந்த பெண்ணின் மேல் தெளிக்கிறார். பிறகு பூப்படைந்த பெண்ணின் பெற்றோர், அங்கு வந்திருப்பவர்கள் அனைவர் மீதும் தெளிக்கப்படுகிறது. பின்பு வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இப்புனித நீர் தெளித்துப் புனிதப்படுத்தப்படுகிறது.

குடும்பச் சடங்கு


புரோகிதர் புனித நீர் தெளித்துச் சென்றதும் பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் மனைவி மற்றும் பெண்கள் சிலர் சேர்ந்து பூப்படைந்த பெண்ணை மஞ்சள்த்தூள் கலந்த நீர் கொண்டு குளிப்பாட்டுகின்றனர். இதன் பிறகு தாய்மாமன் கொண்டு வந்த பட்டுப்புடவை மற்றும் அலங்காரப் பொருட்கள் கொண்டு பூப்படைந்த பெண் அலங்கரிக்கப்படுகிறாள். 
பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் அல்லது அத்தை மகளுக்கு (சிறுமிக்கு) ஆணுக்கான உடை அணிவிக்கப்பட்டு மாப்பிள்ளையாக்கப்படுகிறாள்.பூப்படைந்த பெண்ணிற்கு தாய்மாமன் மனைவியும், மாப்பிள்ளை வேடமணிந்த சிறுமிக்கு பூப்படைந்த பெண்ணின் தாயும் மாலை அணிவிக்கின்றனர். அதன் பிறகு பெண்கள் சேர்ந்து அவர்களுக்குரிய சடங்குகள் செய்து ஆசிர்வதிக்கின்றனர்.

இனி ருது கால (பூப்படைதல்) பலனும் அதன் விவரமும் பார்க்களாம்.

ஸ்திரீ முலம் தனசேர்க்கை யாருக்கு?

ஸ்திரீ முலம் தனசேர்க்கை யாருக்கு?


கூடினேன் கரும்பாம்பு செவ்வாய் நீலன்

கொற்றவனே ஓரிடத்திற் கூடிநிற்க

தெடினேன் தையலிட பொருளுஞ்சேரும்

திடமான மனையுமது கட்டுவானாம்

சூடினேன் சுகமுண்டு சென்மனுக்கு

சுருதிமொழி பிசகாது சிலகாலத்தில்

ஆடினேன் அழுதாலும் வினையும்போமோ

அப்பனே அமடுகளுந் திடமாய்ச்சொல்லே

இன்னுமொரு செய்தியையும் நீ கேட்பாயாக! கரும் பாம்பு எனச் சொல்லப்படும் இராகுவும், செவ்வாயும் நீலன் எனும் சனிபகவானும் ஒருமனையில் கூடிநிற்க ஸ்திரீகளால் தனசேர்க்கை ஏற்படும். கீர்த்திமிகு வீடு கட்டுவான். அச்சென்மனுக்கு சுகம் உண்டு. எனது சற்குருவான போகமகா முனிவரது பேரருட்கருணையால் நான் கூறும் இம்மொழி தவறாது. எனினும் சில வேளைகளில் அழுதாலும் ஊழ்வினைப் பயன் விட்டுப் போகுமா என்ன? எனவே சிற்சில அமடுகளும் (துன்பங்களும்) வந்து சேரும் என்று திடமாகச் சொல்வாயாக.
 

யோகம்

Wednesday, 29 October 2014
யோகம்


கேளப்பா ஈரைந்தில் முகோள் நிற்க

கெதியுள்ள சன்னியாசி யோகம்யோகம்

ஆளப்பா அத்தலதில் இருகோள் நிற்கில்

அப்பனே தபசியடா யோகிஞானி

கூளப்பா ஒரு கோளும் குணமாய்நிற்கில்

குவலயதில் புனிதனடா ஞானியோகி

வீளப்பா விண்ணுலகத் தேவரோடு

விதமாக வீற்றிருப்பான் ரிஷிகளோடே

இன்னுமொரு கருத்தைக் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்குப் பத்தாமிடத்தில் மூன்று கிரகங்கள் நிற்க கெதிதருகின்ற சன்னியாசி யோகம் என்பர். அதே பத்தாம் இடத்தில் இரண்டு கிரகங்கள் இருப்பின் தபசியாகவும், யோகியாகவும், ஞானியாகவும் இருப்பான். மற்றும் அதே இடத்தில் ஒரு கோள் பலம் பெற்று குணமாக இணக்கத்துடன் நின்றால் அவன் அந்நிலவுலகில் புனிதனாகவும் ஞானியாகவும் யோகியாகவும் விளங்குவதோடு விண்ணுலகில் உள்ள தேவர்களோடு சகல வரிசைகளுடன் ரிஷிகளின் கூட்டத்துடன் உடன் உறைவான்.


ஶ்ரீ துர்க்கை வசியன்

ஶ்ரீ துர்க்கை வசியன்


தாமென்ற அம்புலிக்கு நாலாமாதி

தயவாக லெக்கினத்து நாலோன் தானும்

யேனென்ற யெவ்விடத்தில் கூடிட்டாலும்

இதமாக அசுரகுரு இணங்கி நிற்க

தேனென்ற தேவிபரா துர்க்கை பூசை

திடமாகச் செய்திடுவன் வராகியோடு

கோனென்ற கொடியோர்கள் எதிர்நில்லார்கள்

கொற்றவனே வசியனடா கூறுகூறே

சிறப்புடைய சந்திரனுக்கு நான்கிற்குடையவனும் அதே போல் இலக்கினத்திற்கு நான்கிற்குடையவனும் இராசி மண்டலத்தில் எவ்விடத்தில் கூடி நின்றாலும், அதற்கு இதமாக அசுர குரு இணங்கி நிற்கவும், தேன் போன்று இனிமை செய்யும் தேவி பராசக்தி என்ற துர்க்கை மீது பேரன்பு பூண்டு பூசை செய்வதோடு வராகி பூஜையும் இணக்கமுறச் செய்வோன் என்றும் எத்தகைய சூழ்ச்சிகளும் கொடியவர்களும் இவனுக்கு எதிர் நிற்க மாட்டார்கள் என்றும் இவனே தேவதை வசியன் என்று திடமாகக் கூறுக.