ஓரைகள் விளக்கம்

Monday 18 August 2014
ஓரைகள் -ஒரு பார்வை


ஓரைகள் : கொஞ்சம் தெரிஞ்சிப்போம்...

நவகிரகங்களில் ராகு, கேதுவை தவிர மற்ற 7 கிரகங்களுக்கும் ஓரையில் இடமுன்டு......

சூரிய ஓரை
சந்திர ஓரை
செவ்வாய் ஓரை
குரு ஓரை
சனி ஓரை
புதன் ஓரை
சுக்கிர ஓரை

இதில் எந்த கிழமை ஆரம்பமாகிரதோ அன்று அதுவே முதல்
ஓரை.

உதா: இன்று சனி கிழமை....இன்று ஆரம்ப ஓரை சனி ஓரையே..

ஓரைகள் முறையே 1 மணி நேரம் தங்கள் ஆதிக்கத்தை செழுத்தும்...அது பஞ்சாங்கத்தில் கொடுத்திருப்பார்கள்....

ஓரைகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள:
ஓரைகள் என்பது 1 மனி நேரத்துக்கு ஒரு ஓரை மாறும்..
அதாவது சனி கிழமை ஆரம்ப ஓரை சனி ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரை...

அதன் பிறகு குரு ஓரை,அதன் பின் செவ்வாய் ஓரை.....
எளிதில் நினைவு வைத்துக்கொள்ள 1 நாள் விட்டு 1 நாம் பின் நோக்கி எண்ண வேண்டும்..

சனி கிழமை:
1 நாள் விட்டு பின் நோக்கி செல்ல வியாழன்(குரு) ஓரை...1 நாள் விட்டு பின் நோக்கி செல்ல செவ்வாய்(செவ்வாய் ஓரை)

இதுபடியே ஒருநாளைக்கு 24 மணி நேரமும் ஓரைகள் மாறி மாறி வரும்......

சுப அசுப ஓரைகள்:
சுப ஓரைகள்: 

குரு, 
சந், 
சுக்கிர,
புத ஓரைகள்

அசுப ஓரைகள்:

சனி,
சூரியன்,
செவ்வாய் ஓரைகள்

கிழமைகளுக்கு பகை ஓரைகள்:
ஞாயிறு - சனி, சுக்கிரன்

திங்கள் - கிடையாது

செவ்வாய் - சனி, புதன்

புதன் - சந்திரன்

வியாழன் - கிடையாது

வெள்ளி - சூரியன், சந்திரன்

சனி - சூரியன்

அசுப ஓரைகளிலும், பகை ஓரைகளிலும் நல்ல விஷயங்களை செய்யாமல் இருப்பது நல்லது....

ஓரைகளில் செய்யத்தக்கவை:
சூரிய ஓரையில் அரசு சார்ந்த விஷயங்களும்,பத்திரம் சம்பந்தமான விஷயங்களையும்..

சந்திர ஓரையில் பிரயாணம்,மற்ற சுப காரியங்களும்,

செவ்வாய் ஓரையில் ரகசியத்தை வெளியிட கூடாது, முடிந்த வரை அமைதியாய் இருப்பது சுபம்...நிலம் சம்பந்த விஷயம் பேசலாம்...

புதன் ஓரையில் கல்வி, எழுத்து, ஜோதிடம் போன்ற விஷயங்களையும்..

வியாழ ஓரையில் அனைத்து சுப காரியங்களையும்

சுக்கிர ஓரையில் பெண்கள் சம்பந்தமான,வாகனம் சம்பந்தமான விசயங்களையும்,..

சனி ஓரையில் செவ்வாயை போலவே இருப்பது நல்லது...

மொத்தத்தில் சுப ஓரையில் சுபமும், அசுப ஓரையில் முடிந்த வரை நல்ல விஷயத்தை தவிர்ப்பது நல்லது......சற்று முயன்று தான் பாருங்களேன்...........வாழ்வில் வெற்றி பெற........

ஓரைகளின் உட்பிரிவு:
அனைவருக்கும் ஓரை பற்றி தெரியும்..சிலர் முன்பே அறிந்திருப்பீர்..ஆனால் அதன் சூட்சமம் யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை..அந்த மாதிரி பதிவுகளை படித்திருக்க மாட்டீர் என்று நினைக்கிறேன்...

ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு ஓரை மாறும் என்பது நமக்கு தெரிந்த்தே..ஆனால் தசா,புத்தியில் உட்பிரிவாக வரும் அந்தரம்,சூட்சமம் போல,

ஓரையில் உட்பிரிவு உண்டு...அது எப்படி எனில்...

இன்று வெள்ளிக்கிழமை...

முதல் ஓரை சுக்கிர ஓரை..

சுக்கிர ஓரையில் முதல் 12 நிமிடம் சுக்கிர அந்தர ஓரையும்
அடுத்த 12 நிமிடம் சனி ஓரையும்
அடுத்த 12 நிமிடம் சூரைய ஓரையும்
அடுத்த 12 நிமிடம் சந்திர ஓரையும்
அடுத்த 12 நிமிடம் செவ்வாய் ஓரையும் வரும்..

ஆக 1 மணி நேரத்திற்க்கு இப்படியாக அந்த குறிப்பிட்ட கிரக தாக்கம் இருக்கும்.....

கிழமைகளில் ஞாயிறு,திங்கள் என்று கிரக பெயர்கள் ஏன் வைத்தார்கள் ?.....

அந்த கிரக தாக்கம் அந்த கிழமையில் அதிகம் இருக்கும்...

அது போலவே அந்த கிழமையில், அந்த அந்த ஓரை கிரக தாக்கம் அதிகம் இருக்கும், அந்த அந்தர ஓரையில் அந்த கிரக தாக்கம் அதிகம் இருக்கும்.......

ஒரைகளுக்கு 100% பலம் உண்டு என தெரிந்து கொள்ளுங்கள்...

சரி வெள்ளி முதல் ஓரை சுக்கிர ஓரை,2 வது ஓரை புத ஓரை...

புதன் ஓரையின் உட்பிரிவு எப்படி வரும் எனில்

முதல் 12 நிமி புதன்,அடுத்து குரு,சுக்,சனி,சூரி......
புரிந்ததா?....................

ஓரை கணக்கு:
ஓரைகள் பஞ்ஞாங்கத்தில் பொதுவாக 6 மணியில் இருந்து ஆரம்பித்திருப்பார்கள்....இது பொது....

ஆனால் ஒவ்வொரு ஊருக்கும் சூரிய உதயம் அஸ்தமனம் வேறு படும்..

சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதை 12 ஆல் வகுத்து வருவதை ஒரு ஓரை எனக்கொள்ள வேண்டும்..

அதன்படியே 12 ஓரைகளும் பகல் பொழுதிற்க்கு கணக்கிடலாம்...துல்லியமாக ஓரையை கணக்கிட இம்முறையே கையாளப்படுகிறது...

இரவு பொழுதும் இப்படியே

செய்திகளும் ஓரைகளும்;
ஓரைகளுக்கும் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் உண்டு..ஏன்?....எப்படி?....

அது எப்படியெனில், ஓரைகள் 100 % பலம் வாய்ந்தவை..நாமக்கு நடக்கும் (அ) நாம் கேட்கும் செய்திகள் ஓரை சார்ந்த கிரக காரகத்தன்மை பொருந்தியதாக இருக்கும்...

நீங்கள் திடீர் என்று ஒரு கோரமான செய்தி (விபத்து) போன்ற செய்திகள் கேட்டால் அது செவ்வாய் ஓரையோ அல்லது செவ்வாய் அந்தர ஓரையாவது இருக்கும்...

அது மட்டும் இல்லாமல் கிழமைகளுக்கு உரிய பகை ஓரைகளிலும் இது போன்ற கோர செய்திகள் கேட்பீர்கள்...

நம்மை சுற்றி நடக்கும் அனைத்திற்க்கும் காரணம் உண்டு...
முயன்றுதான் பாருங்களேன்...


5 comments:

  1. BALU IYER said...:

    ஓரை சூரி,சுக்,புத,சந்,சனி,குரு,செவ் என்ற வரிசையில் தானே வருகிறது. உட் பிரிவும் இதே வரிசையில் 7 தானெ வர வேண்டும். அது மட்டும் எப்படி கிழமைகளின் வரிசையில் 5 வருகிறது. திசா - புக்தி ஒரே வரிசையில் தானெ வருகிறது.

  1. Unknown said...:

    Mr.Babu Nanba Neengal Kanakku pottu paarungal Kanakku thappavarum.
    avar sollumpati Kanakku potta kanakku sariyavarum Kanakku sariya vantha yethukka venndiyathuthan That is True ................ ok

  1. Unknown said...:

    சூப்பர்

  1. முதலில் வருவது ஓரை கணக்கு அதாவது சூரி சுக் புதன் சந்திரன் சனி குரு வரிசையில் வருவது. இரண்டாவது தசா புக்தி கணக்கு கிரக வரிசைப்படி நடக்கும்.

Post a Comment