புனர்பூ தோஷம்

Monday, 21 November 2016

இது ஜாதக அடிப்படையில் சந்திரன் மற்றும் சனி சேர்க்கை , பார்வை இருவரின் நட்சத்திர கால்களில் மாற்றி நிற்பது போன்ற எவ்வகை காரணத்திலோ இவர்கள் இருவரும் சம்பந்தம் பெற்றால் அது புனர்பூ தோஷம் ஆகிறது.இதனால் முக்கியமாக திருமணத்தில் தடைகள் ,தாமத திருமணம் போன்ற திருமண விஷயத்தில் பல தடைகளை உண்டாக்குகிறது. ஏதோ ஒரு வகையில் இவர்கள் வலுவிழந்தால் ஒழிய இதன் பாதிப்பு நிச்சயம் ஏற்படும் ..

குருவே சரணம் .........

08 Aug 2016

Sunday, 7 August 2016

இன்று

Saturday, 6 August 2016

மாற்றங்கள்

Sunday, 24 July 2016

வாழ்க்கையில் பல மாற்றங்கள் . நேரம் கிடைப்பதே மிக அரிதாக உள்ளது .இனி கிடைக்கும் நேரத்தில் உபயோகமான ஜோதிட தகவலை பதிகிறேன் .

நூறு வயது

Wednesday, 15 April 2015
நூறு வயது 


இந்த கலியுகத்தில் நூறு வயது வரை வாழ்வது என்பது சற்று சாத்தியம் இல்லாததே. தற்பொழுது உள்ள மக்கள்தொகை பெருக்கத்தாலும் , அவர்களின் நேரமின்மை காரணமாக நேரத்தை சேமிக்க வந்ததே வாகனங்கள் .

நேரம் மட்டும் சேமிக்க்கபடவில்லை , அவர்களின் வாழ்நாளின் நேரமும் சேமிக்கப்பட்டு குறைக்கப்பட்டுவிட்டது . இருப்பினும் நூறு வயதுவரை வாழ்பவர்களும் இருக்கின்றனர் .

அதற்க்கு அவர்களின் ஜாதக ரீதியாக சொல்லப்போனால் , லக்ன அதிபதி வலுவாக இருக்கவேண்டும் .விரிவாக சொல்லப்போனால் லக்னாதிபதி கேந்திரம் , திரிகோணம் பெற்று அவர் அமர்ந்த வீடு பகை இல்லாமல் இருந்து, அவரை சுபர் பார்த்து , அவர் லக்ன பாவர் , பாவ கிரக சாரம் பெறாமல் இருந்தால் அந்த ஜாதகர் ,நினைத்ததை சாதித்து நூறு வயது வரை வாழ்வார்.

யார் யோகக்காரர் ?

Monday, 13 April 2015
யார் யோகக்காரர் ?


                                 

உலக மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் அதில் எத்துனை பேர் தாங்கள் நினைத்தபடி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர், தம்முடைய எண்ணங்கள் செயலாக மாறி வாழ்க்கை சந்தோஷமாக வாழ்கின்றனர்  என்று கேட்டால் அது கேள்விக்குறியே !.

ஒருவருக்கு சரியான வயதில் திருமணம் , வேலை , பிள்ளைபேறு என சகலமும் தங்குதடையின்றி நடந்துவிட்டாலே அவர் யோகக்காரர்தான். சகலமும் நல்லதாக நடக்க லக்ன அதிபதி நல்ல நிலையில் இருக்கவேண்டும், கொடுப்பவர் கொடுத்தாலும் அதை அனுபவிக்க நமக்கு நடக்கும் திசை நல்லதாக இருக்கவேண்டும் .

என்னதான் நல்ல திசையாக இருந்தபோதிலும் லக்ன அதிபர் பலமின்றி இருந்தால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதைதான் . அதுபோல லக்னத்தில் லக்ன சுபர் இருந்து அதை சுப கிரகங்கள் பார்த்தால் அவர் மிகுந்த யோகக்காரரே.

வணக்கம் ..........

Sunday, 12 April 2015
மிகுந்த வேலை பளு காரணமாக 2 மாதங்களாக வலைதளத்திற்கு வரமுடியவில்லை , அதற்காக மன்னிக்கவும் . மீண்டும் வழக்கம் போல் ஜோதிட தகவல் களஞ்சியம் தமது பணியை  தொடரும் ..ஓம் நமசிவாய ......