மாற்றங்கள்
Posted by
Dady
at
10:43
Sunday, 24 July 2016
வாழ்க்கையில் பல மாற்றங்கள் . நேரம் கிடைப்பதே மிக அரிதாக உள்ளது .இனி கிடைக்கும் நேரத்தில் உபயோகமான ஜோதிட தகவலை பதிகிறேன் .
நூறு வயது
Posted by
Dady
at
09:30
Wednesday, 15 April 2015
நூறு வயது
இந்த கலியுகத்தில் நூறு வயது வரை வாழ்வது என்பது சற்று சாத்தியம் இல்லாததே. தற்பொழுது உள்ள மக்கள்தொகை பெருக்கத்தாலும் , அவர்களின் நேரமின்மை காரணமாக நேரத்தை சேமிக்க வந்ததே வாகனங்கள் .
நேரம் மட்டும் சேமிக்க்கபடவில்லை , அவர்களின் வாழ்நாளின் நேரமும் சேமிக்கப்பட்டு குறைக்கப்பட்டுவிட்டது . இருப்பினும் நூறு வயதுவரை வாழ்பவர்களும் இருக்கின்றனர் .
அதற்க்கு அவர்களின் ஜாதக ரீதியாக சொல்லப்போனால் , லக்ன அதிபதி வலுவாக இருக்கவேண்டும் .விரிவாக சொல்லப்போனால் லக்னாதிபதி கேந்திரம் , திரிகோணம் பெற்று அவர் அமர்ந்த வீடு பகை இல்லாமல் இருந்து, அவரை சுபர் பார்த்து , அவர் லக்ன பாவர் , பாவ கிரக சாரம் பெறாமல் இருந்தால் அந்த ஜாதகர் ,நினைத்ததை சாதித்து நூறு வயது வரை வாழ்வார்.
யார் யோகக்காரர் ?
Posted by
Dady
at
08:59
Monday, 13 April 2015
உலக மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் அதில் எத்துனை பேர் தாங்கள் நினைத்தபடி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர், தம்முடைய எண்ணங்கள் செயலாக மாறி வாழ்க்கை சந்தோஷமாக வாழ்கின்றனர் என்று கேட்டால் அது கேள்விக்குறியே !.
ஒருவருக்கு சரியான வயதில் திருமணம் , வேலை , பிள்ளைபேறு என சகலமும் தங்குதடையின்றி நடந்துவிட்டாலே அவர் யோகக்காரர்தான். சகலமும் நல்லதாக நடக்க லக்ன அதிபதி நல்ல நிலையில் இருக்கவேண்டும், கொடுப்பவர் கொடுத்தாலும் அதை அனுபவிக்க நமக்கு நடக்கும் திசை நல்லதாக இருக்கவேண்டும் .
என்னதான் நல்ல திசையாக இருந்தபோதிலும் லக்ன அதிபர் பலமின்றி இருந்தால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதைதான் . அதுபோல லக்னத்தில் லக்ன சுபர் இருந்து அதை சுப கிரகங்கள் பார்த்தால் அவர் மிகுந்த யோகக்காரரே.
விஷம் தீண்டி மரணம்
Posted by
Dady
at
23:44
Saturday, 13 December 2014
விஷம் தீண்டி மரணம்
பிறப்பும் இறப்பும்
மானுட வாழ்வில் தவிர்க்கமுடியாதது. இதன் இடைப்பட்ட காலமே வாழ்க்கை. வாழ்க்கையின் அர்த்தம்
புரியாமலேயே வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
உலகில் பிறக்கும்
அனைத்து உயிரினங்களும் ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும். ஆசனங்கள் மற்றும் சில பயிற்ச்சிகள்
மூலம் வாழ்நாளை நீட்டிக்கமுடியுமே தவிர இறப்பை தவிர்க்கமுடியாது.
மூப்பு எய்தி இறப்பவர்கள்
பாதிபேர் எனில், தற்பொழுது துர்மரணம் எய்துவோர் எண்ணிக்கைதான் அதிகம். விஞ்ஞான வளர்ச்சி
என்கிறபேரில் வாகனங்கள் எமனாக இருக்கிறகாலம் இது.
இதுபோலவே விஷஜந்துக்களால்
உயிர் இழப்பவர்கள் சிலபேர். மொத்தத்தில் இறப்பு எப்படி நம்மை தீண்டும் என்று நமது ஜாதகம்
மூலம் அறியலாம். ஒருவர் விஷஜந்துக்களால் கடிபட்டு உயிர் இழப்பாரா என்பதை ஜாதகம் மூலம்
அறியலாம்.
அதாவது ஜனன ஜாதகத்தில்
8ம் இல்லத்தில் செவ்வாய் இருந்து ,சூரியனோடு பாம்பும் சேர்ந்து நின்றால் அச்சாதகன் விஷம்
தீண்டி மரணம் எய்துவான்.
சத்திரம் கட்டி அனைவருக்கும் உணவளிப்பவன்
Posted by
Dady
at
05:31
Thursday, 11 December 2014
சத்திரம் கட்டி அனைவருக்கும் உணவளிப்பவன்
உணவு, இன்றியமையாதது.
இது இல்லாமல் யாரும் இல்லை என்றே கூறலாம். பிறந்தது முதல் நாம் உடல் ஆரோக்கியமுடனும்,
உயிர் வாழ இன்றியமையாததும் உணவு.
சிலர் டயட் என்கிறபேரில்
பெருத்த உடலை குறைக்க உணவை குறைத்தும் அல்லது உண்ணாமல் ஃபாஸ்டிங் என்றும் உலவிவர, நமது
நாட்டிலேயே அன்றாட ஒரு வேலை உணவிற்க்கு வழியில்லாமல் பட்டினியால் வாடுவோரும் இருக்கத்தான்
செய்கின்றனர்.
இப்படி உணவுக்கு
கஷ்டப்படுவோருக்கு யாராவது உணவு அளித்தால், இவர்களுக்கு அவர்கள் தெய்வமாக தெரிவார்கள்.
ஒருவருக்கு வயிறார உணவு அளிப்பது பெரிய விஷயம்,புன்னியமும் கூட.
ஒருவருக்கே இந்நிலை
எனில் பல பேருக்கு உணவளிக்க வேண்டுமெனில் அதற்க்கு நல்ல மனமும், புண்ணியமும் அதற்கான
போதிய போதிய வருமானமும், எல்லாவற்றிற்க்கும் மேலாக அதற்கான அமைப்பும் வேண்டும்.
அதாவது அவனது ஜாதகத்தில்,
10ம் அதிபதி 4ம் வீட்டில் அமர்ந்து, லக்ன அதிபதி திரிகோணத்தில் நின்றால் அந்த ஜாதகன்
இதுபோன்ற அனைவருக்கு உணவளிக்கும் வகையில் சத்திரம்
கட்டி மற்றவர்களின் பசியாற்றுவான். தெய்வத்தின் மறுவுருவாக மற்றவர்க்கு தெரிவான்.
Subscribe to:
Posts (Atom)
பிரபல பதிவுகள்
திருத்தளங்கள்
தொடர்புக்கு
jothidamkarppom@gmail.com





