புலிப்பாணி ஜோதிடம்: சுக்கிரன் விபரம்

Friday, 3 October 2014
புலிப்பாணி ஜோதிடம்: சுக்கிரன் விபரம்



கேளப்பா சுக்கிரனுக் கெருதுகோலும்

கெணிதமுட னாட்சியது உச்சம்மீனம்

வாளப்பா கோதையவள் நீச்சமாவாள்

வகையில்லா சிங்கமுடன் விருச்சிகந்தாள்

ஆளப்பா பகையதுவே யாகும் ஆறும்

அளவில்லா நட்பென்றே யறைந்தவாறு

மாளப்பா பகையதுவே யாகும் ஆறும்

மார்க்கமுடன் புலிப்பாணி யறிவித்தேனே.

சுக்கிர பகவானுக்கு ரிஷபமும், துலாமும் எண்ணிக் கூறி விடில் ஆட்சி வீடென்றும் மீனம் உச்ச வீடென்றும், கன்னி ராசி நீச்ச வீடென்றும் சிம்மமும் விருச்சிகமும் பகை வீடென்றும் ஏனைய இராசிகளான மேஷம், மிதுனம், கடகம், தனுசு, மகரம், கும்பம் நட்பு வீடென்றும் இதுவே நன்மார்க்கம்[வழி] என்றும் புலிப்பாணி கூறினேன்.





புலிப்பாணி ஜோதிடம்: குரு விபரம்

புலிப்பாணி ஜோதிடம்: குரு விபரம்





ஓமென்ற வியாழனுக்கு ஆட்சிகேளு

உண்மையுடன் தனுமீன மிரண்டேயாகும்

காமென்ற கற்கடகம் உச்சமாகும்

கனமில்லா மகரமது நீச்ச வீடாம்

போமென்ற விருச்சிகமும் பகையதாகும்

புகழ்பெற்ற மற்றேழு ராசிநட்பாம்

நாமென்ற போகருட கடாக்ஷத்தாலே

நயமாக புலிப்பாணி நவின்றிட்டேனே.

ஓம் என்ற பிரணவப் பொருளை விளக்கும் வியாழனுக்கு தனுசும்,மீனமும் ஆட்சி வீடென்றும் கர்க்கடகம் உச்ச வீடென்றும் உச்ச வீட்டிற்கு ஏழாவதான இராசி மகரமானது நீச்சமென்றும் விருச்சிக ராசி பகையென்றும் மற்றைய இராசிகளான மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், கும்பம் நட்பு வீடுகளாம்.





ஜோதிட தகவல்: தத்து எடுத்தல்

ஜோதிட தகவல்: தத்து எடுத்தல்




ஒருவருக்கு 60 வயதாகியும் புத்திரன் இல்லை என்றாலும் அல்லது ஒருவரது ஜாதகப்படி அவருக்கு அற்ப ஆயுள் அல்லது புத்திர பாக்கியம் இல்லையென்றும் தெரிய வந்தால் அவர் ஒரு பையனை தன்னுடைய மகனாக தத்து எடுத்துக்கொள்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் தீர்க ஆயுளும், நல்ல அறிவுடனும், நல்லதிர்ஷ்டமும், குழந்தை பாக்கியமும் உடையவனாய் இருத்தல் வேண்டும். மேலும் தத்தெடுக்கப்போகும் அந்த பையன் அவருடைய கோத்திரமாகவும் இருத்தல் வேண்டும்.

இந்த தத்து எடுக்கும் நிகழ்ச்சி அல்லது சடங்கு உத்திராயண காலத்தில் (அதாவது தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 6 மாதத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் நடக்க வேண்டும்).

அதுபோல இந்த தத்து எடுக்கும் சடங்கை அஸ்வினி, சுவாதி, புனர்பூசம், பூசம், ரோகிணி, அனுஷம், ஹஸ்தம், ரேவதி, திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் முற்பகலில் நடத்தப்பட வேண்டும்.

அந்த நேரத்தில் லக்கினத்திலும், 5ம் இடத்திலும் எந்த ஒரு பாவ கிரகமும் இருக்க கூடாது. அதுபோல பையனுக்கு அன்றைய தின நட்சத்திரமும், சந்திரனின் சஞ்சாரமும் சாதகமாக இருக்க வேண்டும்.

மேற்கூறிய முறைப்படி தத்து எடுக்காமல் ஏதோ ஒரு நாள், நட்சத்திரத்தில் இந்த சடங்கை செய்தால் தத்து எடுக்கப்பட்ட பையனால் வீட்டில் கலகமும், குழப்பமும் உண்டாகி நம்மதி குறையும் என சாஸ்திரம் கூறுகிறது.




புலிப்பாணி ஜோதிடம்: புதன் விபரம்

புலிப்பாணி ஜோதிடம்: புதன் விபரம்





தானென்ற புதனுக்கு மிதுனமாட்சி

தன்மையுள்ள கன்னியது மாட்சி உச்சம்

மானென்ற மீனமது நீசமாகும்

மனிதரிலாம் கடகமது பகையாமென்று

வானென்ற மற்றேழு ராசிதானும்

வகையான நட்பென்று வாழ்த்தினோம்யாம்

நானென்ற போகருட கடாக்ஷத்தாலே

நவக்கிரக நிலையறிவாய் நன்மைதானே.


தன்னிகரற்ற புதபகவானுக்கு ஆட்சி வீடு மிதுனம் என்றும், தன்மையுள்ள கன்னியது ஆட்சி வீடும், உச்ச வீடென்றும் மீனராசி நீச்ச வீடென்றும் மற்றும், கடகம், சிம்மம் பகை வீடென்றும் ஏனைய மேஷம், ரிஷபம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய இராசிகள் எமது குருநாதரான போகரது அருளினாலே நட்பாம் என்ற வாழ்த்தினோம் எனினும் நவக்கிரக நிலையறிந்து பலன் கூறல் நன்மை பயக்கும்.



புலிப்பாணி ஜோதிடம்: செவ்வாயின் விபரம்

Wednesday, 1 October 2014
புலிப்பாணி ஜோதிடம்: செவ்வாயின் விபரம்




கேளப்பா செவ்வாய்க்கு மேஷம் தேளும்
கெணிதமுட னாட்சியது வாகும்பாரு
நாளப்பா மகரமது உச்சமாகும்
நலமில்லா நீசமது கடகமாகும்
தாளப்பா தனுமீனம் ரிஷபம் கும்பம்
தயங்குகின்ற கோதையுடன் மிதுனம் நட்பாம்
பாளப்பா கால்சிங்கம் பகையாமென்று
பண்புடனே போகரெனக் குரைத்தார்தானே


செவ்வாய் கிரகத்திற்கு மேஷமும் விருச்சிகமும் ஆட்சி வீடாகும். சனி வீடான மகரம் உச்ச வீடாகும். கடகராசி நீச்ச வீடாக அமைந்து துர்ப்பலன் தரும். தனுசு, மீனம், ரிஷபம் ஆகியவற்றினோடு கன்னியும், மிதுனமும் நட்பு வீடுகளாகும். துலாமும் சிம்மமும் பகைவீடாம் என்று பண்பாகப் போகர் எனக்குச் சொன்னதை உரைத்திட்டேன். 




ஜோதிட தகவல்: ஆயுத பூஜை

ஜோதிட தகவல்: ஆயுத பூஜை






சரஸ்வதி பூஜை

ஆதிபராசக்தியின் தீவிர பக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறைமாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவே விளங்கி வந்தனர்.

சுதர்சனனுக்கு தன் மகள் சசிகலையை மணம் முடித்து வைத்தார் சுபாகு. இதனைக் கண்டு கோபம் கொண்ட யுதாஜித் மற்றும் அவரது மகன் சந்திரஜித் ஆகியோரை பராசக்தியே நேரில் தோன்றி வதம் செய்தார்.

பிறகு பராசக்தி அன்னை சுதர்சனனிடம், அயோத்தி சென்று, அங்கு நீதியுடன் அரசாளவும், தினமும் நாள் தவறாமல் தனக்கு பூஜை செய்யும் படியும் கட்டளை இட்டாள். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி விழாவின் போதும், அஷ்டமி, நவமி, சதுர்த்தி தினங்களில் தனக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் படியும் அன்னை கேட்டுக் கொண்டாள்.
அவ்வாறே அன்னையின் ஆணைப்படி, ஆகம முறைப்படி அனைத்துவிதமான பூஜைகளையும் அன்னைக்கு செய்து வழிபட்டார் சுதர்சனன். அம்பிகையின் பெருமைகளை ஊர் ஊராகச் சென்று பரவச் செய்தனர்.
நவராத்திரி ஒன்பது நாட்களிலும் முறையே மூன்று நாட்களுக்கு பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என வழிபடுவது நன்மையை அளிக்கும். ஸ்ரீ ராமரும், ஸ்ரீ கிருஷ்ணரும் நவராத்திரி வழிபாடு செய்துதான் தங்களது கஷ்டங்களில் இருந்து விடுபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
இத்தகைய மகிமையைக் கொண்டது நவராத்திரி விழா. கலைமகளான சரஸ்வதியை வழிபடும் தினமான சரஸ்வதி பூஜையன்று மாலை கொண்டாடப்படும் விழாவே ஆயுத பூஜை.
சிறப்பாம்சம்

ஆயுத பூஜை அன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரம் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் சுத்தமாக கழுவி, துடைத்து பூஜைகள் செய்யவேண்டும்.

ஆயுத பூஜை அன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைக்கு பயன்படுத்தமாட்டோம் என் உறுதி எடுத்துக்கொள்வோமே!.

ஆயுத பூஜை எப்போது செய்வது?

9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் தசமி திதியில் ஆயுத பூஜை செய்ய வேண்டும். அந்த லக்னத்தில் அன்று எந்த சுபகாரியங்கள் செய்தாலும் அந்த வருடம் முழுவதும் சுபத்தைத் தரும் என்று சாஸ்திரம் சொல்கின்றது. எனவே இத்தகைய நேரங்களில்தான் நாம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய வேண்டும். சிலபேர் நேரம் இல்லை என்று இதற்கு முதல் நாளிலேயே செய்கின்றவர்களும் உண்டு. 

ஆனால், நம் இஷ்டத்திற்கு கால நேரம் பார்க்காது ஆயுத பூஜை செய்யக் கூடாது. ஆயுத பூஜை அன்றுதான் ஆயுதத்திற்குப் பூஜை. எனவே, அதற்கு உகந்த நேரத்தில்தான் நாம் பூஜை செய்ய வேண்டும்.

வாகன பூஜைக்கு ஏற்ற நேரம் 

விருச்சிக லக்னத்திற்கு அதிதேவதை செவ்வாய் பகவான். செவ்வாய் பகவான்தான் வாகனங்களுக்கு அதிதேவதை. ஆகவே, வாகனங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் விருச்சிக லக்னத்தில்தான் ஆயுத பூஜை செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கின்றது.





ஜோதிட தகவல்: அம்மன்

கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் :நவராத்திரி விழா:






பரிவேட்டை[பூஜை எடுப்பு/ பாணாசூரன் வதம்] ,3-10-14.


நவராத்திரி விழாவின் 10ம் திருவிழாவான 3-10-14 வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.30 மணிக்கு அன்னதானமும், மதியம் 12 மணிக்கு அம்மன் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம்[கன்னியாகுமரி அருகில் ] நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்று பரிவேட்டை[பூஜை எடுப்பு/பாணாசூரன் வதம் ] நிகழ்ச்சி நடைபெறும்..

பகவதி என்பது பொதுவாக பெண் தெய்வங்களை அழைக்கும் ஓர் சொல். மந்திர வடிவான வாலை புவணை திரிபுரை என்ற லட்சுமி சரஸ்வதி துர்கை என்ற இந்த மூன்று தெய்வங்களின் மந்திர சக்தியே பகவதி என்பதாகும்.பகவதி அம்மன் என்று நாம் கூறும் போது அவள் இந்த மூன்று சக்திகளில் ஒன்றாகவோ அல்லது மூன்றுமாகவோ கருதப்படுவாள். அதனால் தான் பெரும்பாலான பெண் தெய்வங்களின் மந்திரங்களின் நடுவே பகவதி என்ற சொல் இனைக்கப்பட்டுள்ளது.நவராத்திரி விழாவின் 10ம் திருவிழாவான 3-10-14 வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 

தொடர்ந்து காலை 6 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.30 மணிக்கு அன்னதானமும், மதியம் 12 மணிக்கு அம்மன் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம்[கன்னியாகுமரி அருகில் ] நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்று பரிவேட்டை[பூஜை எடுப்பு/பாணாசூரன் வதம் ] நிகழ்ச்சி நடைபெறும்.இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ... 

கன்னியாகுமரிஅன்னை மாயம்மா சித்தர்[கன்னியாகுமரி-சித்தர்/கன்னியாகுமரி கடற்கரையில் வாழ்ந்த சித்த புருஷி அன்னை மாயம்மா மாயி ] :ஒழுங்காக வாரப்படாததால் பறக்கும் கேசம், கந்தலைவிட மோசமாகத் தென்படும் உடை, தோற்றத்தில் வினோதமாக அமைந்த சுருக்கங்கள்.. இப்படித்தான் தோற்றமளித்தார் மாயம்மா. தபோ வனத்தில் தம்முடைய அதிஷ்டானத்தை அமைத்துக் கொண்ட சத்குரு ஞானானந்தகிரி சுவாமிகள், ஒரு முறை தன் பக்தர்கள் கேட்டபோது சொன்னார். கன்யாகுமரி கோயிலில் பகவதியாக இருப்பவள்தான், கடற்கரையில் மாயம்மாவாக உலவி வருகிறாள் என்று. மகான்களைப் பற்றி மகான்களே அறிவார்கள் போலும். இறையருள் பெற்று பகவதியம்மன் பார்வையிலேயே இருந்த மாயம்மாவை பலரும் கண்டுகொள்ளவில்லை. தன்னை எவரும் வந்து வணங்கவில்லையே என்று மாயம்மா வருந்தியதும் இல்லை. எனது பிள்ளைகளைப் பாதுகாத்திடவே நான் இங்கு வந்தேன் என்பதே மாயம்மாவின் கூற்று. ஒருநாள் மாயம்மா, பகவதியம்மன் கோயிலின் உணவு விடுதியில் மதிய உணவை உட்கொண்ட சமயத்தில், அங்கு வந்த ஒரு தொழிலாளி வயிற்று வலியால் துடித்தபடி உருண்டு புரண்டான். 

மாயம்மா அவனிடம், எழுந்திரு மகனே, இந்த உணவை உட்கொள்! என்று தனது கைப்பிடி சோறை அந்தத் தொழிலாளிக்கு வழங்கினார். அதனை வாங்கி உண்ட அந்தத் தொழிலாளியின் வயிற்றுவலி சட்டென்று நீங்கியது. இந்நிகழ்வே, மாயம்மாவின் கருணை உலகமெங்கும் பரவ காரணமாக அமைந்தது.ஒருசமயம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பஸ் ஒன்று, சாலையில் படுத்திருந்த நாயின் மீது ஏறி இறங்கியது. பஸ் ஏறியதால், குடல் வெளியே வந்து உயிருக்குப் போராடிய நாயை அங்கு இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். மாயம்மா, அடிபட்டுக் கிடந்த நாயைத் தூக்கி தனது மடியில் கிடத்தி, நாயின் குடலை வயிற்றுக்குள் தள்ளி, தான் வைத்திருந்த வைக்கோலால் நாயின் கிழிந்த வயிற்றைத் தைத்து, தனது கையில் இருந்த கிழிந்த துணிகளைக் கொண்டு காயம்பட்ட பகுதிகளைச் சுற்றிக் கட்டினார். பின்னர், நாயின் உடலை நீவி விட்டார். அவ்வளவுதான்! மடியில் கிடந்த நாய், துள்ளிக்குதித்து எழுந்து ஓடியது. இந்நிகழ்வுக்குப் பின்னர், மாயம்மாவைச் சுற்றி நாய்கள் கூட்டமும் மிகுந்த அன்புடன் சுற்றிவர ஆரம்பித்தது. இப்படி பல சம்பவங்களைச் சொல்லலாம்.இதன்பின்னர், பக்தர்களின் கூட்டம் அவரை நாடி வந்தது. தன்னை நாடிவந்த அடியவர்களை மாயம்மா நல்வழிப்படுத்தியதுடன், தடுமாறுபவர்களை தனது அருளால் திருத்தவும் செய்தார். 

இந்நிலையில், அவரது பக்தரான ராஜமாணிக்கம், கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மாயம்மா தங்குவதற்கு கடற்கரையில் குடில் அமைத்துக் கொடுத்தார். இதன்பின்னர், அன்னை மாயம்மாவின் நினைவாக அவர் வாழ்ந்த கன்னியாகுமரியில் தனிக் கோயில் எழுப்பப்பட்டு இன்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அன்பின் உருவமான அன்னை மாயம்மாவை வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. திருமணம், புத்திர பாக்கியம், தொழில் அபிவிருத்தி என பல்வேறு கோரிக்கைகளுடன் வந்து பக்தர்கள் அன்னையை வணங்கிச் செல்கின்றனர்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் ஜனாதிபதிகள் ஜெயில் சிங், வி.வி.கிரி ஆகியோரால் தேடிவந்து வணங்கப்பட்டவர்... தமிழ் திரையுலகத்தினர் சிலரால் இப்போதும் துதிக்கப்படுகிறவர்... 

மனிதர்களுக்கு இணையாக நாய்களையும் மதித்து அன்பு காட்டி, சமகாலத்தில் வாழ்ந்து, 1992-ம் ஆண்டு பிப்ரவரி ஒன்பதாம் தேதி ஜீவன்முக்தி அடைந்த ஜீவகாருண்ய சொரூபிதான்... இந்த அன்னை மாயம்மா! பூண்டி மகான், கசாவனம்பட்டி மௌனஜோதிகள், கோடி சாமிகள், மருந்துவாழ்மலை நாயனார் சுவாமிகள் ஆகிய மகான்களால் 'கன்னியாகுமரி அம்மன்!’ என்று அழைக்கப்பட்டவர் மாயம்மா ... கன்னியாகுமரியில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது மாயம்மா சமாஜம் ...


தகவல் அளித்தவர்,

சிவ .அ.விஜய் பெரியசுவாமி ,
கல்பாக்கம் ,9787443462
....சிவாய நம......