தசா/புத்தி பலன்: லாப பாவகம்

Saturday, 27 September 2014
பதினொன்றாமாதிபன் தசை/புத்தி





லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் பெயர் புகழ் முதலானவற்றைக் கொண்டே சம்பாத்தியங்கள் உண்டாவதும் மிகவும் உயர்ந்த உன்னதமான வாழ்க்கையும் நல்ல குணமும் எல்லோரையும் சமமாக பாவிக்கும் பரந்த நோக்கமும் நாவன்மையும் எழுத்து பேச்சுத் திறமைகளால் பொருள் லாபங்களும் உண்டாகும்.

இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பந்தயசூதாட்ட வியாபாரங்களில் லாபங்களும் புதையல் கிடைத்தது போல் சொத்துக்கள் வந்து சேர்வதும் தன் வாக்கினாலேயே லாபங்களை அடைவதும் உண்டாகும்.

மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். தானாக பொருள் வந்து சேரும். தீர்த்த யாத்திரை மகான்களின் சேர்க்கை முதலியன உண்டாகும். சகோதரர்களுக்கு லாபங்கள் உண்டாகும். ஆலயங்களைக் கட்டுதல், அற நிலையங்களை ஸ்தாபித்தல் போன்ற பொறுப்புக்களையும் ஏற்று நிதி திரட்டி அவற்றை நடத்தி வைக்கும் படியான பாக்கியமும் உண்டாகும்.

நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வியால் மிக உயர்ந்த பதவியை அடைதல், ஞானியாதல் எல்லாவிதங்களிலும் சுகசௌக்கியங்கள் நிறைந்த வாழ்க்கையும் சகல நன்மைகளும் உண்டாகும்.

ஐந்தாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் புத்திர லாபங்கள் ஏற்படுவதும், தனக்குத் தன் புத்திரர்களால் லாபங்கள் உண்டாவதும் மேலும் மேலும் சொத்த சுகங்கள் விருத்தியாவதும் சகலசித்திகளும் நடைபெறும் மாந்திரீகப் ஜோதிடம் போன்ற வித்தைகளும் அறியும் சக்தியும் உண்டாகும்.

ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுவதும் பகைவரால் தொல்லைகளும் அன்னிய தேசத்தில் அன்னியரிடம் கைகட்டி பிழைக்கும் படியான நிலைமையும் சொத்து சுகம் இல்லாத பரதேசி போன்ற வாழ்க்கையும் உண்டாகும்.

ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவிக்கு மரணமும் இரண்டாவது அல்லது மூன்றாவது விவாகம் ஏற்படும். அன்னிய தேசங்களில் சஞ்சரிப்பதன் மூலம் லாபங்கள் உண்டாகும். அதிகமான காமவேட்கையும் அன்னிய ஸ்திரீகளை அடைவதும் உண்டாகும்.

எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன்னுடைய சக்தி யுக்தி உழைப்பு முதலியவற்றால் அன்னியரே லாபம் அடைவார்கள் தனக்கு அற்ப லாபங்களே உண்டாகும். குடும்பத்தில் மனைவிக்கு அடங்கி நடக்கும் படியான நிலைமையும் உண்டாகும். எப்பொழுதும் எதற்காவது ஏங்கிக் கொண்டே இருக்கும கேவலமான வாழ்க்கை உண்டாகும்.

ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தான தர்மங்கள் யாக எக்கியங்கள் செய்து புண்ணிய லாபங்களை அடைவதும் அரசர்களாலும் பிரபுக்களாலும் பூஜிக்கத் தக்க நிலைமையும் தர்மம் தவறாத வாழ்க்கையும் மதியூகமும் உண்டாகும்.

பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் மேதையாக விளங்குவதும் தான் கூறும் ஆலோசனைகளுக்காகவே லாபங்களை அடைதலும் தொழிற் திறமைக்காக எல்லோராலும் மதிக்கப்படத்தக்க நிலைமையும் சகல சுகங்களும் உண்டாகும்.

பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான லாபங்களும் சுகபாக்கியங்களும் தாமே வந்தடைதலும் அழகிய இளம்பெண்களின் சகவாசமும் கலைத்திறமைகளும் கல்வியால் பிரகாசமும் உண்டாகும்.

பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அதிகமான காதல் வேட்கையும் பெண்களை சுலபமாக வசீகரம் செய்யும் சக்தியும் காமலீலைகளால் பொருள் விரயமும் உண்டாகும்.




தசா/புத்தி பலன்: ஜீவன பாவகம்

Friday, 26 September 2014
பத்தாமாதிபன் தசை/புத்தி






லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கவித்துவ சக்தியும் தான் இருந்த இடத்திலிருந்தே தொழிலும் புகழும் அடையும் படியான யோகமும் மேலும் மேலும் செல்வமும் புகழும் விருத்தியாவதும் உண்டாகும்.

இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எழுத்தாளர் அல்லது பிரசங்கியாக புகழும் பொருளும் அடைதலும் தொழில் விருத்தியும் குடும்ப சுகங்களும் உண்டாகும்.

மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் விருத்திக் குறைவும் தன் சகோதரர்களை அண்டிப்பிழைக்கும் நிலைமையும், அல்லது சொத்துக்களால் வரும் வருமானத்தைக் கொண்டு ஜீவனமும் சிறு சிறு தொழில்களை ஆரம்பித்துவிட்டு விடுதலும் எதிலும் நிலையற்ற தன்மையும் உண்டாகும்.

நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வி மேம்பாட்டால் உயர்ந்த பதவி அடைதலும் வாகன லாபம் அல்லது வாகன சம்பந்தமான விருத்தியும், குருபக்தி, தெய்வபக்தி, முதலானவைகளும் தாய் தந்தையரிடம் விஸ்வாசமும் அவர்களுக்கு நன்மையும் ஏற்படுதலும் புகழ் பராக்கிரமம் பாக்கியம் ஆகியவை விருத்தியாவதும் உண்டாகும்.

ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான தனலாபங்களும் பல தொழில்கள் ஆரம்பித்து நடத்தி வெற்றியடைதலும் தொழிலிலே கவனமாக இருப்பதும் தொழில் சம்பந்ததப்பட்டதையும் வெகு விரைவில் கிரகித்து கொள்ளும் தன்மையும் புத்திர லாபமும் தன் மக்கள் தனக்கு மீறிய அறிவும் செல்வமும் உடையவராதலும் அல்லது தன் பிள்ளைகளிலோருவன் தனக்கு அடங்காமல் பிரிந்து போய் விடுவதுமான பலன்கள் நடைபெறும்.

ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் தொழில் புகழ் முதலியவற்றை எதிரிகள் கைகொள்வதும் அல்லது அவற்றை வேறொருவனுக்கு விற்றுவிட்டு தான் புதிய தொழிலை ஆரம்பிக்க முயல்வதும் தொழில் இல்லாமல் அலைய நேர்வதும் பிற்பகுதியில் தொழில் வாய்ப்பும் சுகமும் உண்டாவதும் உண்டாகும். மொத்தத்தில் அலைச்சலும் கஷ்டங்களுமே அதிகமாக இருக்கும்.

ஏழாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் வெளியூர் அல்லது அன்னிய நாட்டில் தொழில் ஏற்படுவதும் மனைவியின் சொத்துக்களை நிர்வாகம் செய்யும் பொறுப்புகள் உண்டாவதும் மனைவியின் பணத்தைக்கொண்டு தொழில் நடத்தி மேலான நிலைக்கு வருதல் போன்ற பலன்கள் உண்டாகும். பாபக்கிரமாக இருந்தால் கெட்ட வழிகளில் சம்பாத்தியம் ஏற்படும்.

எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் நோயின் காரணமாக தொழில் முடக்கம் ஏற்படும். அபவாதம், கெட்டப் பெயர், தொழில் நஷ்டங்கள் பலத்த நஷ்டம் முதலானவை ஏற்படலாம். எவ்வித தொழிலும் இல்லாமலும் அன்னியரை அண்டிப் பிழைக்கும் படியான நிலைமையும் தேசாந்திரம் போகும்படியான நிலைமைகளும் உண்டாகும்.

ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னை தந்தையர் தெய்வகுருபக்தி அவர்களுக்கு சுகமும் ஞானமும் கல்வியும் ஒழுக்கமும் நெறிதவறாத நடத்தையும் ஏற்படுவதும், அதிகமான பாக்யம் புகழ் இல்லாத அடக்கமான வாழ்க்கையும், துறவு பூணும்படியான அல்லது சன்யாச மனப்பான்மையும் உண்டாகும்.

பத்தாமிடத்தலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வி மேன்மையும் மேலான தொழிலில் தலைமை ஸ்தானமும் புகழும் உண்டாகும். தொழிலில் நேர்மையும் முறை பிசகாத பண்பும் சத்திய நெறி நடத்தலும் புகழும் கௌரவமும் உண்டாகும்.

பதினொன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழிலில் மேலான நிலைமையும் தன் முயற்சி இன்றியே லாபங்கள் உண்டாதலும் பலவிதமான வருமானங்களால் சொத்து சுகம் ஏற்பட்டு எப்பொழுதும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அனுபவித்தலும், புத்திரலாபங்களும், புத்திரர்க்கு சுகங்களும் உண்டாவதுமாகும்.

பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் நஷ்டங்களும் எவ்விதத் தொழிலும் செய்ய சக்தியில்லாதவனாக இருப்பதும் தொழிலில் பகைவரால் நஷ்டங்களும் அடிமைப் பிழைப்பும் உண்டாகும்.




ஜோதிட தகவல்: காதல்

நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி?வெற்றி பெறுவீர்களா? தொடர்ந்து படியுங்கள்..



மேஷம்

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

கன்னி

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும். 

துலாம்

எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு

இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம்

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்

மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர்..



தகவல் அளித்தவர்,

திரு சோமசுந்தரம் அவர்கள்,
மதுரை.