அரசனை போல் வாழ்வு

Monday, 3 November 2014
அரசனை போல் வாழ்வு


சூடினேன் இன்னமொரு சேதிகேளு

சுபருடனே நாலுபேர் கூடிநிற்க

ஆடினேன் அத்ற்க்குநால் மற்றோரெல்லாம்

அப்பனே அவனிதனில் முழுவாழவன்

கூடினேன் கோவேறு கழுதைகோடி

கொற்றவனே துரகங்கள் கோடாகோடி

தேடினேன் தேவர் வீரர் பகையுமெத்த

திக்கெட்டு மாளுமன்னன் தெரிந்துகொள்ளே

இன்னொரு விவரத்தையும் நான் கூறுகிறேன். அதையும் நீ நன்கு கவனிப்பாயாக. சுப கிரகத்துடன் நான்கு பேர் நிற்கவும் அதற்கு நாலில் மற்றோர் நிற்க அவன் (அச்சாதகன்) பூமியில் தீர்க்காயுளுடன் வாழ்வான். அவனுக்கு கோடிக் கணக்கில் கோவேறு கழுதைகளும் அதே போல் கோடானு கோடிக் குதிரைகளும் வாய்க்கும். அது மட்டுமல்லாமல் தேர் வீரர் படையும் கொண்டு எட்டுத்திக்கும் தன் அருளாணை கொண்டு அரசாளும் மன்னன் என்றே நீ கூறுவாயாக.
 

ருது: நட்சத்திர பலன்

Sunday, 2 November 2014
ருது: நட்சத்திர பலன்


அஸ்வினி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் சுபகரமாயிருப்பாள்.

பரணி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் அசல்வீடு வாழப் பொறுக்காதவள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

கிருத்திகை நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் மிக தரித்திரமாயிருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

ரோகிணி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் புத்திர சம்பத்தாயிருப்பாள்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் சுசிகரமாயிருப்பாள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் நிற்பாக்கியமாயிருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் பதிவிரதையாயிருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

பூசம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் பதிபட்சமுண்டாயிருப்பாள்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் கபடியாய் இருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

மகம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் புத்திரநாசமடைவாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

பூரம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் கர்ப்ப நஷ்டமடைவாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

உத்திரம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் தந்தானியமுண்டாயிருப்பாள்
.
அஸ்தம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் எள்ளளவும் ஆகாது. இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

சித்திரை நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் வாழ்வு குன்றியிருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் வெகுபிள்ளைகளை பெறுவாள்.

விசாகம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் அழுக்கடைந்திருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

அனுஷம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் பதிக்கு நேசமாயிருப்பாள்.

கேட்டை நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் சிறையாயிருக்கும். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

மூலம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் புத்திரருண்டாயிருப்பாள்.

பூராடம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் விசனமாயிருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் சம்பத்துடனேயிருப்பாள்.

திருவோணம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் பாக்கியமுண்டாயிருக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் பிள்ளைகளுண்டாயிருப்பாள்.

சதயம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் பூரணாயுசுவுடன் இருப்பாள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் நோய்கொண்ட புருஷனை உடையவளாயிருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் தரித்திரமாயிருக்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் சகல சம்பத்துண்டாயிருப்பாள்.

சக்கரவர்த்தி ஆகும் யோகம்

சக்கரவர்த்தி ஆகும் யோகம்


கொள்ளப்பா கோள் ஒன்று சரமாய் நான்கில்

கொற்றவனே யேகசக்கிர வர்த்தியாவன்

அள்ளப்பா அனைபரி சேனைகூட்டம்

அணியணியா யிருக்குமடா அநேகமாக

உள்ளப்பா உத்தமர்கள் அருளும்பெற்று

உலகிலுள்ள அரசரிடம் பகுதிவாங்கி

இல்லப்பா இவ்வுலகில் சேல்கண்ணாளை

இதமாகச் சுகித்திருப்பன் அனேகம்பேரே.

இதனையும் நீ நன்கு உன் மனத்துள் கொள்வாயாக! இலக்கினத்திற்கு நான்காம் இடத்தில் சரத்தில் ஒரு கோள் நிற்க அச்சாதகன் சக்கரவர்த்தியாகும் யோகம் உள்ளவன். அனேகமான யானை, குதிரை ஆகிய சேனைக் கூட்டம் மிகவும் அணி பெற்று விளங்கும். இன்னுமொன்றையும் உணர்க. இச்சாதகன் உத்தமர்களின் அருள் பெற்றவனாக இலங்குவான். உலகில் உள்ள பல அரசர்களிடம் பகுதி (கிஸ்தி) வாங்கி இன்புடைய மாதரோடு சுக ஜீவனம் செய்வான்.
 

ருது: திதி பலன்

ருது: திதி பலன்


ஒரு பெண் ருதுவான திதிக்கு பலன் உரைத்திருக்கின்றனர். இது வளர்பிறை தேய்பிறை என இரண்டுக்கும் பொருந்தும்.

பிரதமை திதியில் ஒரு பெண் ருதுவானால், பாவியாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

துவிதியை திதியில் ஒரு பெண் ருதுவானால், பாக்கியவதியாயிருப்பாள்.

திரிதியை திதியில் ஒரு பெண் ருதுவானால், குழந்தைகளைப் பெறுவாள்.

சதுர்த்தி திதியில் ஒரு பெண் ருதுவானால், பல புருஷரையிச்சிப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

பஞ்சமி திதியில் ஒரு பெண் ருதுவானால், நன்மையடைவாள்.

சஷ்டி திதியில் ஒரு பெண் ருதுவானால், சண்டைகாரியாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

சப்தமி திதியில் ஒரு பெண் ருதுவானால், புத்திரபாக்கியமுண்டாயிருப்பாள்.

அஷ்டமி திதியில் ஒரு பெண் ருதுவானால், இராட்சசியாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

நவமி திதியில் ஒரு பெண் ருதுவானால், கிலேசமாயிருப்பாள்.

தசமி திதியில் ஒரு பெண் ருதுவானால், புத்திரபாக்கியமுண்டாயிருப்பாள்.

ஏகாதசி திதியில் ஒரு பெண் ருதுவானால், சுகிகரமாயிருப்பாள்.

துவாதிசி திதியில் ஒரு பெண் ருதுவானால், பலரையுந் துஷிப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

திரியோதிசி திதியில் ஒரு பெண் ருதுவானால், நல்ல தாஜசுண்டாகி இருப்பாள்.

சதுர்த்தசி திதியில் ஒரு பெண் ருதுவானால், பாபஞ்செய்கிறவளாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

பெளர்ணமி திதியில் ஒரு பெண் ருதுவானால், அசல்வீடு திரிவாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

அமாவாசை திதியில் ஒரு பெண் ருதுவானால், தரித்திரமாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

கோடிதனம் கொண்ட ஜாதகன்

கோடிதனம் கொண்ட ஜாதகன்


பாரப்பா பதிக்கேழு நாலே ழெட்டில்

பாங்கான கோள்களது சேர்ந்துநிற்க

சீரப்பா சென்மனுந் தனித்துநில்லான்

செம்பொன்னும் கோடியுண்டு சிற்ப்பாய்வாழ்வன்

வீரப்பா வெகுபூமிக் கரசனாகி

வீரர்படை கரிமாவும் ரதங்களுள்ளோன்

கூறப்பா குவலயதில் யென்னூல்பாரு

குணமாக புலிப்பாணி குறித்திட்டேனே.

இலக்கினத்திற்கு 4,7,8 ல் பாங்கான கிரகங்களானது பரிவுடன் சேர்ந்து நிற்கப் பிறந்த சாதகன் தனித்து நில்லான், சிறந்த செம்பொன்னும் கோடிதனமும் கொண்டவனாய்ச் சிறப்புடன் வாழ்வான். படைபலமும் யானை,குதிரை,ரதம் முதலியவை உடைவனவாய் இந்நிலவுலகில் கீர்த்தி பெறுவான். போகமா முனிவரின் அருளாணை பெற்ற புலிப்பாணி நூற்கருத்தைக் குறித்திட்டேன்.
 

ருது: வார பலன்

Saturday, 1 November 2014
ருது: வார பலன்




ஒரு பெண் ருதுவான கிழமை பொறுத்து அதற்க்கான பலன்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஞாயிறு அன்று ஒரு பெண் ருதுவானால், மிக வியாதியாயிருப்பாள். இவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

திங்கள் அன்று ஒரு பெண் ருதுவானால், பதிவிரதையாயிருப்பாள்.

செவ்வாய் அன்று ஒரு பெண் ருதுவானால், இடுக்கண் வுண்டாயிருப்பாள். இவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

புதன் அன்று ஒரு பெண் ருதுவானால், புத்திரரும் பொருளுமுண்டாயிருப்பாள்.

வியாழன் அன்று ஒரு பெண் ருதுவானால், பாக்கியவதியாயிருப்பாள்.

வெள்ளி அன்று ஒரு பெண் ருதுவானால், பதிபக்தி உடையவளாயிருப்பாள்.

சனி அன்று ஒரு பெண் ருதுவானால், விபத்தை அடைவாள். இவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

விதவை பெண்ணை மணப்பவன் யார்?

விதவை பெண்ணை மணப்பவன் யார்?


வீரப்பா யின்னமொரு புதுமைகேளு

விளம்புகிறேன் வீரியன் வீட்டில்தானும்

ஆரப்பா அசுரர்குரு செவ்வாய்கூடில்

அப்பனே அமங்கலையை அணைந்துவாழ்வன்

கூறப்பா குமரனுக்கு வித்தைபுத்தி

குவலயத்தில் நிதியுண்டு சிப்பிநூல் பார்ப்பன்

சீரப்பா போகருட கடாக்ஷத்தாலே

சிறப்பாகப் புலிபாணி செப்பினேனே.

வீரமிக்கவனே! இன்னுமொரு புதுமையினையும் நன்கு கேட்பாயாக. சூரியனது வீடான சிம்மத்தில் அசுர குருவான சுக்ராச்சாரியும் செவ்வாயும் கூடினால் அச்சாதகன் அமங்கலையை அணைந்து அவனுக்கு வித்தை புத்தி மிகுந்து இந்நிலவுலகில் நிதி மிகுந்தவனாய் சிற்ப சாத்திரத்தில் வல்லவனாய் நூலாராய்ச்சி உடையவனாவன் என எனது சற்குருவான போகமாமுனிவரது அருளாணையாலே புலிப்பாணி கூறினேன்.