புனர்பூ தோஷம் :2

Tuesday, 22 November 2016

புனர்பூ தோஷம் :2

சனி மற்றும் சந்திரனால் ஏற்படும் இந்த புனர்பூ தோஷம் திருமண தடை முதலிய முக்கிய நிகழ்வுகளில் தாமதத்தை கொடுக்கும் . சனி மற்றும் சந்திரன் சம்பந்தம் எவ்வாறு ஏற்படுமெனில் சனி தனது மூன்றாம், ஏழாம்  & பத்தாம் பார்வையால் சந்திரனை பார்ப்பது அல்லது சந்திரன் தனது ஏழாம் பார்வையால் சனியை பார்ப்பது அல்லது இருவரும் சேர்ந்து இருப்பது அல்லது இருவரின் நட்சத்திரமான ரோகினி , அஸ்தம் , திருவோணம் ,பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி மாறி மாறி நிற்பது ஆகிய காரணத்தால் இவர்கள் இருவரும் சம்பந்தம் பெறும்போது புனர்பூ தோஷத்தை ஏற்படுத்துகிறார்கள்..

குருவே சரணம் ..

புனர்பூ தோஷம்

Monday, 21 November 2016

இது ஜாதக அடிப்படையில் சந்திரன் மற்றும் சனி சேர்க்கை , பார்வை இருவரின் நட்சத்திர கால்களில் மாற்றி நிற்பது போன்ற எவ்வகை காரணத்திலோ இவர்கள் இருவரும் சம்பந்தம் பெற்றால் அது புனர்பூ தோஷம் ஆகிறது.இதனால் முக்கியமாக திருமணத்தில் தடைகள் ,தாமத திருமணம் போன்ற திருமண விஷயத்தில் பல தடைகளை உண்டாக்குகிறது. ஏதோ ஒரு வகையில் இவர்கள் வலுவிழந்தால் ஒழிய இதன் பாதிப்பு நிச்சயம் ஏற்படும் ..

குருவே சரணம் .........